மலைக் கொரில்லா (mountain gorilla) கிழக்கத்திய கொரில்லா இனத்தின் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்றாகும். இவைகளில் ஒரு பிரிவு மலைக் கொரில்லாக்கள் மத்திய ஆப்பிரிக்காவின் விருங்க எரிமலைகளில், தென்மேற்கு உகாண்டா, வடமேற்கு ருவாண்டா மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாடுகளின் தேசியப் பூங்காக்களில் காணப்படுகிறது.
மலைக் கொரில்லாக்களின் மற்றொரு இனம் எளிதல் செல்ல இயலாத உகாண்டாவின் பிவிண்டி தேசியப் பூங்காவில் உள்ளது. செப்டம்பர், 2015-இல் இங்கு 900 மலைக்கொரில்லாக்கள் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர்.
மலைக்கொரில்லாக்களை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் வாழிடத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான, அல்லது அதிக சூழ் இடர் கொண்ட அருகிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ’