மனிதக் குரங்கு (ape) என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும். பொது வழக்கில் இது பெரும்பாலும் மனிதர்களை உள்ளடக்குவதில்லை எனினும் அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ் வகையுள் அடங்குபவரே. நடைமுறையில் உள்ள வகைப்பாட்டில் இரண்டு ஹொமினோய்டு குடும்பங்கள் உள்ளன:
மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின. இவை அனைத்துண்ணிகள் எனப்படுகின்றன. இவற்றின் உணவு பழங்கள், புல்லு, விதைகள், பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி என்பவற்றுடன் இலகுவில் செரிமானம் அடையக்கூடிய எத்தகையவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் தாயகம் ஆபிரிக்காவும், ஆசியாவும் ஆகும். எனினும் மனிதக் குரங்குகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது பெரும்பாலான மனிதக் குரங்கு வகைகள் அருகிவிட்டன அல்லது அழியும் தீவாய்ப்பைக் கொண்டுள்ளன. அழியும் தறுவாயில் உள்ள இவ்வின விலங்குகளுக்கான மிகப் பெரிய பிரச்சினை மழைக்காட்டு வாழிடங்கள் குறைந்து வருவதாகும்.