நீலகிரி மந்தி (Nilgiri langur) என்பவை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் குரங்கு ஆகும். இவை கர்நாடகத்தின் குடகு, தமிழ்நாட்டு பழனி மலைகள், கேரலத்தின் ஏலக்காய் மலை ஆகிய மலைகளில் வாழுகின்றன. இதன் உடல் பளபளபளப்பான கருமையாகவும், மஞ்சளும் பழுப்பும் கலந்த தலையும் கொண்டவை. இதன் அளவு சாதாரணக் குரங்கின் அளவே இருக்கும். நீண்டவால் கொண்டவை. இக்குரங்குகள் ஒன்பது அல்லது பத்து என கூட்டமாக வாழும். இதன் முதன்மை உணவு பழங்கள், இலைகள், தண்டுகள் ஆகும். சிலசமயம் விளை நிலங்களை வேட்டையாடும்.
வெளி இணைப்புகள்
நீலகிரி மந்தி – விக்கிப்பீடியா