வடக்கு சுமத்ரா காண்டாமிருகம்

சிட்டகாங் காண்டாமிருகம் அல்லது வடக்கு கேரி காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் (டைசெரோரைனஸ் சுமட்ரென்சிஸ் லேசியோடிஸ்) என்பது சுமத்ரா காண்டாமிருகத்தில் மிகவும் பரவலாகக் காணப்படும் துணைச் சிற்றினமாகும். ஆசியாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரே ஒரு துணைச் சிற்றினமாக இது உள்ளது.


இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் இந்த காண்டாமிருக இனம் அதிகாரப்பூர்வமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், பர்மா மற்றும் மலேசியத் தீபகற்பம் போன்ற காடுகளில் சிறிய எண்ணிக்கையில் இவை இன்னும் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது மிகவும் சந்தேகத்திற்குரியது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது ஐ.யூ.சி.என்”செம்பட்டியலில் ”அதிதீவிர ஆபத்தானது” என்று கருதப்படுகிறது .


வகைப்பாட்டியல்


பிரதான நிலப்பகுதி சுமத்ரா துணைச் சிற்றின காண்டாமிருகத்திற்கு டைசெரோஹினஸ் சுமட்ரென்சிஸ் லேசியோடிஸ் என பெயரிடப்பட்டது. காதுகளில் குறிப்பிடத்தக்க நீண்ட ரோமங்களைக் கொண்டிருப்பதால், லேசியோடிசு என்ற பெயர் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது.வடக்கு சுமத்ராவின் துணைச் சிற்றினங்கள் முடிக்காது சுமத்ரா காண்டாமிருகம் அல்லது காது-பிரிவு காண்டாமிருகம் என்றும் அழைக்கப்பட்டன.


டைசெரோஹினஸ் சுமட்ரென்சிஸ் லேசியோடிசை தனி துணைச் சிற்றினமாகக் கருதவேண்டும் எனக் கருத்துக்கள் உள்ளன. இது இந்தோனேசியா காண்டாமிருகம் டைசெரோஹின்சு சுமத்ரென்சிசு சுமத்ரென்சிசு ஒத்திருப்பதாகக் கருதப்பட்டது. இருப்பினும், வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் பெரிய உருவுடன், நீண்ட முடிகள் காதுகளில் காணப்படுவதும், நீண்ட மற்றும் பெரிய கொம்புகளும் இருப்பதால் இது தனி துணைச்சிற்றினமாகவே கருதப்படுகிறது.


விளக்கங்கள்


வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் மிகப்பெரிய துணைச்சிற்றினமாகும். இது, காதுகளில் நீண்ட முடி மற்றும் நீண்ட கொம்புகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், மேற்கு சுமத்ரா காண்டாமிருகத்தை விட உடலில் முடிகளின் அளவு குறைவாக உள்ளது.


வாழ்விடமும் பரவலும்


வடக்கு சுமத்திரா காண்டாமிருகம் வெப்பமண்டல மழைக்காடுகள், சதுப்புநிலங்கள், மேகக் காடுகள், அடர்வனம் மற்றும் புல்வெளிகளில் வாழ்ந்தது. இது மலைப்பகுதிகளில், ஆறுகள், செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் ஆகியவற்றில் வசித்து வந்தது.


வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் சுமத்ரா காண்டாமிருகங்களில் மிகவும் பரவலாகக் காணப்பட்ட இனமாகும். இது இந்தோசீனிய தீபகற்பம், கிழக்கு இந்தியா, பூட்டானின் கிழக்கு இமயமலை மற்றும் பங்களாதேஷ் முதல் வடக்கு சீனாவின் உள் மங்கோலியா வரை இருந்தது. 1920களில் இந்தியா, பங்களாதேஷ், சீனா மற்றும் பிற நாடுகளிலும், 1997ல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் வடக்கு ஹேரி காண்டாமிருகம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மியான்மரின் தமந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அவை இருந்தன என்று கூறப்படுகிறது. 1980களில் மியான்மாரில் இந்த இனங்கள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், சுமத்ரா காண்டாமிருகத்தினை அண்மையில் பார்த்ததாகப் பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் வடக்கு சுமத்ரா காண்டாமிருகத்தின் சிறிய எண்ணிக்கை மியான்மாரில் இன்னும் உயிர்வாழக்கூடும் என நம்பப்படுகிறது. ஆனால் அந்நாட்டின் அரசியல் நிலைமை இத்தகவலை உறுதிப்படுத்தச் சரிபார்ப்பைத் தடுத்துள்ளது. தீபகற்ப மலேசியாவில் தமன் நெகாரா தேசிய பூங்காவில் வடக்கு ஹேரி காண்டாமிருகம் இன்னும் வாழ வாய்ப்புள்ளது, இருப்பினும் தீபகற்ப மலேசியாவில் இவைக் காணப்படுவது மிகவும் சந்தேகத்திற்குரியது.


செய்ற்கை வாழ்விடத்தில்


வடக்கு சுமத்ரா காண்டாமிருகம், மற்ற இரண்டு துணைச் சிற்றினங்களைப் போலவே, அவற்றின் இயற்சூழலுக்கு வெளியே வாழ்வதில்லை. இவை செயற்சூழலில் இனப்பெருக்கம் செய்யாது. ஆனால் 1889ஆம் ஆண்டில் இந்தியாவின் அலிபூர் மிருகக்காட்சி சாலையில் வெற்றிகரமான இந்த காண்டாமிருகம் பிரசவித்தது. இதற்குப்பின் வேறு எங்கும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறவில்லை. இலண்டன் மிருகக்காட்சிசாலை 1872ஆம் ஆண்டில் சிட்டகாங்கில் பிடிக்கப்பட்ட ஒர் இணை காண்டாமிருகத்தினைப் பெற்றது. இதில் பெண் காண்டாமிருகத்திற்கு “பேகம்” என்று பெயரிடப்பட்டது. இது 1900 வரை வாழ்ந்து. அயற்சுழலில் அதிக நாட்கள் வாழ்வதற்கான சாதனைப்படைத்தது. அழிந்துபோன துணைச் சிற்றினங்களின் ஏழு எண்ணிக்கையில் பேகமும் ஒன்றாகும். உயிரியல் பூங்காக்கள் மற்றும் சர்க்கசுகளில் காணப்பட்ட லேசியோடிசு துணைச் சிற்றினத்தில் இதுவும் ஒன்று.


கலாச்சார சித்தரிப்புகள்


வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் சீன இலக்கியத்தில் மிகவும் மதிக்கப்படும் விலங்காக அறியப்படுகிறது. பெரும்பாலான பண்டைய மற்றும் நவீன சீன கலைகள் மற்றும் கலைப்பொருட்களில் கொம்புகள் கொண்ட காண்டாமிருகத்தின் உருவங்களைக் காணலாம்.


சுமத்ரா காண்டாமிருகத்தைப் பற்றிய பல நாட்டுப்புறக் கதைகள் காலனித்துவ இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வேட்டைக்காரர்களால் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சேகரிக்கப்பட்டன. வடக்கு கிளையினங்கள் வாழ்ந்த பர்மாவில், சுமத்ரா காண்டாமிருகம் நெருப்பைச் சாப்பிட்டது என்ற நம்பிக்கை ஓர் காலத்தில் பரவலாக இருந்தது. நெருப்பு உண்ணும் காண்டாமிருகம், புகைபிடிப்பதற்காகக் குறிப்பாக முகாம் தீ நிகழ்வினைத் தாக்குவதாக , கதைகள் விவரித்தன. ஒவ்வொரு ஜூலை மாதத்திலும், சுமத்ரா காண்டாமிருகங்கள் பவுர்ணமியன்று கூடும் என்ற பாரம்பரிய நம்பிக்கையும் இருந்தது.


வெளி இணைப்புகள்

வடக்கு சுமத்ரா காண்டாமிருகம் – விக்கிப்பீடியா

Northern Sumatran rhinoceros – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *