இலைக் குரங்கு (Phayre’s leaf monkey) குரங்கு வகையைச் சார்ந்த இவ்வினம் தென்கிழக்காசியாப் பகுதியில் வாழும் பழைய உலக குரங்கு ஆகும். பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் ஆணையாளராகவும், மொரிசியசின் ஆளுநராகவும் இருந்த ஆர்தர் பர்வேசு பியாரி என்பவரால் இக்குரங்கு இனம் பற்றிய தகவல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டது. பங்களாதேசம், இந்தியா. தாய்லாந்து, சீனா, லாவோசு, வியட்நாம், போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இவை மர இலைகளை உட்கொண்டு வாழுகிறது. இந்தியாவில் திரிபுரா மாநிலக்காடுகளில் வாழும் இவை மரத்தூளினை உணவாக உட்கொள்கிறது. இவற்றுள் மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன.
About the author
Related Posts
September 22, 2021
நீலகிரி மந்தி குரங்கு
September 27, 2021
கீரி
September 28, 2021