துருவ மான் அல்லது பனி மான் (Reindeer / Rangifer tarandus) எனப்படுவது ஒரு மான் இனமாகும். இவை வட அமெரிக்காவில் கரீபு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இவை வாழும் பகுதிகளைப் பொறுத்து இவற்றின் கூட்டத்திலுள்ள மான்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. உருசியாவின் தூந்திரப் பகுதியில் காணப்படும் தைமிர் எனப்படும் தூந்திர துருவ மான்களின் (R.t. sibiricus) கூட்டமே உலகின் மிகப்பெரிய காட்டு துருவ மான் கூட்டமாகும். இதில் உள்ள மான்களின் எண்ணிக்கை 4,00,000-10,00,000 ஆகும். மனிதர்கள் மத்திய பிளாய்டோசீன் காலம் முதல் துருவ மான்களைச் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவை இறைச்சி, தோல், கொம்புகள், பால் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காகப் பயன்படுகின்றன. ஆண், பெண் இரண்டிற்குமே கொம்புகள் வளர்கின்றன. பொதுவாக ஆண் துருவ மான்களின் கொம்புகள் பெரியவையாக உள்ளன. பிரபலமான கிறித்துமசு தாத்தாவின் வண்டியை இழுக்க இவை பயன்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
About the author
Related Posts
September 17, 2021
சிவிங்கிப் பூனை
September 22, 2021
பழைய உலக மான்
September 23, 2021