ரோ மான் (ஆங்கிலப் பெயர்: roe deer, உயிரியல் பெயர்: Capreolus capreolus) அல்லது ஐரோப்பிய ரோ மான் அல்லது மேற்கு ரோ மான், செவ்ரெயுயில், அல்லது ரோ என்பது ஒரு ஐரோவாசிய மான் இனம் ஆகும். இந்த இன ஆண் சில நேரங்களில் ரோபக் என்று அழைக்கப்படுகிறது. ரோ மான் ஒப்பீட்டளவில் சிறிய அளவுடையது ஆகும். இது சிவப்பு மற்றும் சாம்பல்-பழுப்பு நிறத்தில் உள்ளது. இது குளிர்ந்த சூழல்களுக்கு மிகவும் ஏற்றதாகத் தகவமைந்து உள்ளது. இது ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது. மத்திய தரைக்கடல் முதல் ஸ்காண்டினேவியா வரையிலும், ஐக்கிய இராச்சியம் முதல் காக்கேசியா வரையிலும், மற்றும் கிழக்கில் வட ஈரான் மற்றும் ஈராக்கிலும் இந்த இனம் பரவலாகக் காணப்படுகிறது. இது சற்றே பெரிய சைபீரியன் ரோ மானில் இருந்து வேறுபட்டது ஆகும்.
About the author
Related Posts
October 4, 2021
செம்பிட்டத் தில்லான்
October 11, 2021
லோட்டன் தேன்சிட்டு
September 16, 2021