சுமாத்திரா காண்டாமிருகம்

சுமாத்திரா காண்டாமிருகம் (Sumatran rhinoceros) ஆசிய இரண்டு கொம்பு காண்டாமிருகம் மற்றும் மயிரடர்ந்த காண்டாமிருகம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. ரெய்னோசெரடியி குடும்பத்திலேய மிகவும் அரிதான உறுப்பினர் எனலாம்(தற்போது கடுமையான ஆபத்தான அழியும் நிலையில் உள்ள விலங்கு). தற்போது நடைமுறையில் டைசோரனஸ் பேரினத்தில் உள்ள ஒரே உயிரினம் இவ்விலங்கே ஆகும்.


சுமாத்திரா காண்டாமிருகமே இவ்வுலகில் மிகச்சிறிய காண்டாமிருகம் ஆகும். இதன் பாதம் முதல் தோள் வரையிலுள்ள உயரம் மட்டுமே 112செ.மீ முதல் 145செ.மீ ஆகும். இவ்விலங்கின் தலை மற்றும் உடம்பின் நீளம் 2.36மீ-3.18மீ மற்றும் வாலின் நீளம் 35-70செ.மீ ஆகும். சுமாத்திராகாண்டாமிருகத்தின் இதுவரை கணக்கெடுக்கப்பட்ட அதிக எடை 500கிலோ முதல் 1000கிலோ வரை. இவ்விலங்கின் மேற்மயிர் படலமானது சிவப்பு மற்றும் பழுப்பு நிறக்கலவையில் இருக்கும். இதன் கொம்புகள் சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் காண்டாமிருகங்களுக்கு பெண் காண்டாமிருங்களை விட நீண்ட கொம்புகள் இருக்கும். சுமாத்திரா காண்டாமிருகங்கள் அடர்ந்த இரண்டு தோல் மடிப்புகளைக் கொண்டுள்ளது. இம்மிருகங்களின் கழுத்துப் பகுதியில் மட்டும் சிறிய மற்றும் அடர்த்திக் குறைவான தோல் மடிப்பைக் கொண்டுள்ளது. இதன் தோல் மட்டும் 10மி.மீ -16மி.மீ அடர்த்தியானது. காடுகளில் வாழும் விலங்குகளுக்கு மட்டும் தோலிலடியிலான கொழுப்பு இருக்காது. இவற்றின் முடி மிருகத்திற்கு மிருகம் வேறுபடும். மற்றும் ஒரு துண்டு போன்ற நீளமான முடி அமைப்பு இதன் காதுகளின் மேல் உள்ளது. அனைத்து காண்டாமிருகங்களைப் போலவே இவற்றிற்கும் கண்பார்வை மிகவும் குறைவு. இவற்றால் சரிவாக உள்ள பகுதிகளில் சுலபமாக நடக்க முடியும்.


சுமாத்திரா காண்டாமிருகங்களின் முன்னோர்கள் மழைக்காடுகளிலும் சதுப்புநிலங்களிலும் பனி மூட்டமாய் காணப்படும் காடுகளிலும் வாழ்ந்தன. இவை இந்தியா, பூட்டான், பங்களாதேஸ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்விலங்குகள் பொதுவாக தனிமையிலேயே வாழும். இனப்பெருக்கத்துக்காகவும் குட்டிகளை வளர்பதற்காகவும் மட்டும் ஒன்றாக வாழும். பழங்களும் சிறுக்கிளைகளுமே இதன் உணவு. இவை இதன் குரலுக்காகவும் பிரபலமாய் பார்க்கப்படுகிறது. புலிகளும் காட்டுநாய்கள்தான் இவற்றின் வேட்டையாடிகள் ஆகும். ஆண் மிருகங்களின் சராகசரி எல்லைப்பரப்பு 500கி.மீ ஆகும்.இவைகள் தினமும் 50கிலோ எடையுள்ள உணவை உட்கொள்ளும். இவை சுமார் 30 வகையான செடிகளை உண்ணுகிறது. இவற்றின் உடலுறவு முறை கறுப்பு காண்டாமிருகத்தின் உடலுறவு முறையை ஒத்ததாக இருக்கும். இவ்விலங்கின் அழிவிற்கு காரணமே “எண்ணெய்த் தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயிகள், மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகள், நோய்கள் மற்றும் சட்டவிரோதமாக விலங்குகளைக் கடத்துதல்” போன்றன ஆகும். தற்போது இவை மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆசிய கண்டத்தில் இருக்கும் வேறு சில நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

சுமாத்திரா காண்டாமிருகம் – விக்கிப்பீடியா

Sumatran rhinoceros – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.