வெள்ளை மூக்குக்கொம்பன் காண்டாமிருகம்

வெள்ளை மூக்குக்கொம்பன் என்பது மூக்குக் கொம்பன் இனங்களிலேயே மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இதில் மொத்தம் இரண்டு துணையினங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum simum) வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. வட வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum cottoni) மிக இக்கட்டான அளவு அருகிவிட்டது. அந்த இனத்தில் தற்போது (2018) மொத்தம் இரண்டு பெண்கள் மட்டும் தான் உலகில் உயிருடன் இருக்கின்றன. அவற்றில் ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோய் தொற்றின் காரணமாக இறந்துவிட்டது.


வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிகி (6000 பவுண்டு) மீறக்கூடியது. 4,500 கிகி (10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும்.


வெளி இணைப்புகள்

வெள்ளை மூக்குக்கொம்பன் – விக்கிப்பீடியா

White rhinoceros – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *