ஆலம்பாடி மாடு

ஆலம்பாடி மாடு என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாட்டினமாகும். இது கிட்டத்தட்ட அழிந்த நிலையில் உள்ளது.


விளக்கம்


ஆலம்பாடி என்பது ஓகேனக்கலில் இருந்து சுமார் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் கர்நாடகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். அந்த ஊரில் தோன்றிய மாட்டு இனமாதலால் இது இப்பெயரைப் பெற்றது. இந்த மாடானது வண்டி இழுப்பதற்கும், உழவுப் பணிகளுக்கும் ஏற்றவை. சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய இவை நீண்ட கல்களையும், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியையும், கனத்த கொம்பையும் கொண்டன. இந்த மாட்டுக்கு குறைந்த அளவு தீனி போதுமானது.


காணப்படும் இடங்களும், காக்கும் முயற்சியும்


இந்த மாடுகள் தற்போது மிக அரிதாகவே காணப்படுகின்றன. இது தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரத்தைச் சுறிறியுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றம்பாளையம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சிப் பல்கலைக் கழகமானது ஆய்வு செய்து, ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி நிலையத்தை பென்னாகரத்தில் நான்கு கோடி மதிப்பீட்டில் தொடங்க அனுமதியும், நிதியும் கோரி தமிழக அரசிடம் முன்மொழிவை அளித்தது. இதையடுத்து இந்த இன பசுக்களைக் காக்கவும், இன விருத்தி, உறைவிந்து மூலம் சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை பென்னாகரத்தில் தொடங்க 2018 அக்டோபர் 8 அன்று தமிழாநாடு அரசு அரசாணை வெளியிட்டு முதற்கட்டமாக ஒரு கோடி நிதி ஒதுக்கியது.


வெளி இணைப்புகள்

ஆலம்பாடி மாடு – விக்கிப்பீடியா

Alambadi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.