பிரம்மன் மாடு

பிரம்மன் மாடு அல்லது பிரம்மா மாடு ( Brahman or Brahma) எனப்படும் மாட்டினம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமெரிக்கா இறக்குமதி செய்த நாட்டு மாட்டு இனத்திலிரிந்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு மாட்டினமாகும். இந்த பிரம்மா மாடுகள் இந்திய மாட்டினங்களான கன்கரேஜ், ஓங்கோல், கிர் பசு ஆகிய மாட்டு இனங்களை கலப்பினம் செய்த‍தின் மூலம் உருவாக்கப்பட்ட மாட்டு இனம் ஆகும். பிரம்மா மாடு இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படும் கால்நடைகளில் மிகவும் பிரபலமான இனங்களில் ஒன்றாக உள்ளது. இவை பரவலாக அர்ஜென்டீனா, பிரேசில், பராகுவே, ஐக்கிய அமெரிக்கா, கொலம்பியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வளர்க்கப்படுகின்றது.


இனப்பெருக்கம் மற்றும் பயன்பாடு


ஐக்கிய அமெரிக்காவில் இறைச்சித் தேவைக்காக இனப்பெருக்கம் செய்யப்பட்ட முதல் மாட்டினம் பிரம்மா ஆகும். இந்த மாடு 1900 களில் நான்கு வேறுபட்ட இந்திய மாட்டினங்களான கிர், குஜராத், ஓங்கோல், கிருஷ்ணா படுக்கை மாடு ஆகியவற்றை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்தியாவில் இருந்து 1854 இல் இருந்து 1926 வரை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 266 காளைகள் மற்றும் 22 பசுக்களில் இருந்து கரு உருவாக்கப்பட்டது.


பிரம்மம் மாடுகள் வெப்பத்தை தாங்கும் திறன்பெற்றவையாக உள்ளன. இதனால் இவை வெப்ப மண்டல பிரதேசங்களில் பரவலாக உள்ளன. இவற்றுக்கு உள்ள தடித்த தோல் உள்ளதால் பூச்சிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்கின்றன. பிரம்மமா மாடுகள் பிற மாடுகளைவிட நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டதாக உள்ளன. இந்த காளைகளில் 15 வயது அல்லது அதைவிட மூத்தவற்றை கன்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.


வெளி இணைப்புகள்

பிரம்மன் மாடு – விக்கிப்பீடியா

American Brahman – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.