அம்ரித் மகால் (Arvin East (கன்னடம்:ಅಮೃತ ಮಹಲ್) என்பவை ஒரு வகை நாட்டு மாட்டு இனமாகும். இவை பென்னி சாவடி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவை. இவை ஹலிகார் மாடுகளுடன் நெருக்கமான தொடர்புடைய மாட்டினமாகும், இந்த மாடுகள் முற்காலத்தில் போர்க்களத்திற்கு போர்த் தளவாடங்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த காளைகள் அவற்றின் வேகம், உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக குறிப்பிடப்படுகின்றன. இந்த மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும், இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும், இவற்றின் பசுமாடுகள் குறைந்த அளவே பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த மாடுகளை உழைப்புத் தேவைகளுக்காகவே பெரும்பாலும் வளர்த்தனர். இந்த மாடும் ஹலிகார் மாட்டினமும் அரச மரபுகளான விஜயநகரப் பேரரசு, சுல்தான்கள், மைசூர் அரசு ஆகியவற்றால் பாதுகாத்து வளர்க்கப்பட்டவை. தற்காலக் கர்நாடகத்தின், தென்பகுதியான காவல் (கன்னடம்:ಕಾವಲ್) என்னும் பரந்த நிலப்பகுதியில் அக்கால மைசூரின் தேவைகளுக்காக இம்மாடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன.
About the author
Related Posts
October 4, 2021
அரசவால் ஈப்பிடிப்பான்
July 9, 2021
அற்புதப் பழம் மரம் | Synsepalum dulcificum
October 4, 2021