அங்கோரா ஆடு (Angora goat) என்பது ஒரு ஆட்டு இனமாகும். இந்த ஆட்டிலிருந்து கிடைக்கும் மிருதுவான ரோமமானது உலகப் புகழ்பெற்ற மொகேர் என்னும் துணி நெய்ய அவசியமானதாக உள்ளது.
வரலாறு
இந்த ஆடானது நடு ஆசியாவின் மார்க்கோர் காட்டு ஆட்டின் வம்சாவழியினதாக கருதப்படுகிறது. இவை இப்பகுதியில் பல்லோலிதிக்கு அருகே இருந்து வந்தவையாகும். 1938-1952 ஆம் ஆண்டுகளில் வெளியான துருக்கிய லிரா பணத் தாள்களில் ஆங்கொரா வெள்ளாட்டுகள் சித்தரிக்கப்பட்டன.
விளக்கம்
அங்கோரா ஆட்டின் கொம்பானது செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். இதன் மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாக உடலில் தொங்கும். இதன் மயிரானது ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். சாதாரணமாக ஓர் ஆட்டில் இருந்து 2 1/2 ராத்தல் மயிர் கிடைக்கும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் கம்பளி ஆடைகளானது காசுமீர ஆடைகள் பாேல் மிக உயர்ந்தவை. இந்த ஆடுகளை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள். =