செம்மறை மாடு

பர்கூர் மலை மாடு அல்லது செம்மறை (Bargur Cattle; கன்னடம் : ಬರಗೂರು ) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் பர்கூர் மலைக்காடுகளில் மேயக்கூடிய ஒரு மாட்டினமாகும். இந்த மாடு பழுப்பு நிறத்தில் வெள்ளை திட்டுகள் கொண்டு இருக்கும். அரிதாக சிலமாடுகள் வெள்ளை நிறத்திலும் பழுப்பு திட்டுகளுடனும் காணப்படும். இவை மற்ற நாட்டு மாடுகளைவிட இரு மடங்கு அதிகம் உழைக்கும். கடும் வறட்சியைத் தாங்கி வளரும். நான்கு நாட்கள் வரையில்கூட தண்ணீர் குடிக்காமல் தாங்கும். கரடு முரடான மண்ணில் களைப்பில்லாமல் உழவடிக்கும். நான்கு மாடுகளின் பாரத்தை ஒற்றை மாடு சுமக்கும். மேலும் இவை ரேக்ளா பந்தயத்தில் ஓடுவதிலும் பெயர் பெற்றவை இவை கரடுமுரடான இடத்தில் வாழ சிரமமான மலைக்காடில் வாழப்பழகியவை. இவற்றின் கால் குளம்புகள் லாடம் அடிக்க தேவையில்லாதவாறு கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். இதன் பால் மருத்துவ மதிப்பு மிக்கதாக அறியப்படுகிறது. பர்கூர் இன மாடுகள் பெரும்பாலும் விற்பனைக்காக அந்தியூர் மாட்டுச் சந்தைக்குத் தான் கொண்டுவரப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

செம்மறை – விக்கிப்பீடியா

Bargur Cattle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.