பூம்பூம் மாடு

பூம்பூம் மாடு (Boom Boom Ox) என்பது குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு. இதைவளர்த்து பிழைப்பவர்கள் பூம் பூம் மாட்டுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்த 150 குடும்பத்தினர் பூம் பூம் மாடுகளைக் கொண்டு குறி சொல்லுவதைக் குலத் தொழிலாகக் கொண்டுள்ளனர். கோவில் விழாக்கள், மக்கள் கூடுமிடங்களுக்குச் சென்று அல்லது வீடு வீடாகச் சென்று வித்தை காட்டுவது இத்தொழில் ஈடுபடுபவர்களது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட மாட்டிடம் குறி சொல்பவர் கேள்வி கேட்பதும், அக்கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டுவதைக் கொண்டு குறி பலன்களைச் சொல்வர்.


அனைத்து விசயங்களிலும் வாய் பேசாமல் தலையை ஆட்டும் நபரை “பூம் பூம் மாடு” என்று கிண்டலாக அழைக்கும் வழக்கமும் தமிழில் உள்ளது.


வெளி இணைப்புகள்

பூம்பூம் மாடு – விக்கிப்பீடியா

Boom Boom Ox – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *