பிரவுன் ஷ்விஸ் மாட்டு (Brown Swiss cattle) என்பது ஒரு ஐராப்பிய கறவை மாட்டு இனமாகும். இவை இவை ஸ்விட்சர்லாந்து நாட்டின் மலைப் பகுதிகளில் தோன்றியவை. இவை தோற்றத்தில் பெரியதாகவும் பால் கறப்பில் சிறந்தும் காணப்படுபவை. இந்த மாடுகளைக் கொண்டு அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த மாடுகளில் இருந்து கலப்பினத்தை உருவாக்கும் முயற்சி 1963 இல் தொடங்கியது. சாஹிவால் மாடு, சிவப்பு சிந்தி ஆகிய வடஇந்திய மாடுகளுடன் இந்த மாடுகளை கலப்பு செய்து, புதிய கலப்பினம் உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. வட இந்தியாவில் கரண் ஸ்விஸ் என்ற பெயரில் இந்தக் கலப்பின மாடுகள் காணப்படுகின்றன.
About the author
Related Posts
October 8, 2021
முள்ளலகி பறவை
July 9, 2021
அத்தி மரம் | Ficus
September 30, 2021