இபெக்ஸ் காட்டாடு (Ibex) என்பது காட்டு ஆடு ஆகும். இது ஒரு பேரினம் ஆகும். இந்த ஆடு ஒன்பது ஆட்டு இனங்களின் மூதாதை ஆகும். இந்தியாவில் இவை இமயமலையில் காணப்படுகின்றன.
இந்த காட்டு ஆடுகள் மலை வாழ் விலங்குகாக உள்ளன. இவற்றால் வெற்றுப் பாறைகள் மீது ஏறி உணவு தேடி உண்டு வாழ முடியும், இவை மிகவும் சுறுசுறுப்பானவை. கட்டுடல் கொண்டவை. ஆண் ஆட்டிற்கு நீணட தாடியும், நீண்ட தட்டையான வளைந்த கொம்புகளும் இருக்கும். பெண் ஆடுகளின் கொம்புகள் சிறியன. இவற்றின் நிறம் பருவ காலத்துக்கு ஏற்ப மாறுபடும். குளிர் காலத்தில் சாம்பல் கலந்த மஞ்சள் நிறமும், வெயில் காலத்தில் ஆண் ஆடுகள் வெண்திட்டுகள் கொண்ட அடர் பழுப்பு நிறமும், பெண் ஆடுகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுமாக காணப்படும். இது ஒன்பது ஆட்டு இனங்களுக்கு மூதாதையாக கருதப்படுகிறது அவை.