நாட்டு மாடு

நாட்டுமாடு ( zebu (/ˈziːb(j)uː, ˈzeɪbuː/; Bos primigenius indicus or Bos indicus or Bos taurus indicus sometimes known as indicine cattle or humped cattle ) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு மாட்டினம் அல்லது கிளையினம் ஆகும். நாட்டுமாடுகள் முதுகில் திமிலுடனும், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடனும், சிலசமயம் தொங்கிய காதுகளுடனும் இருக்கும். நாட்டு மாடுகளும் அதன் கலப்பின மாடுகள் மிகுந்த வெப்பநிலையை தாங்கக்கூடியதாக உள்ளதால், வெப்பமண்டல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. தூய நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் போன்றவை இழுவை விலங்கு, வண்டி மாடுகள் போன்ற பணி விலங்காகவும், பால் மாடுகளாகவும், இறைச்சித் தேவைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணமானது எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமாடுகளில் சிற்றுரு (மினியேச்சர்) மாடுகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. 1999ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகமானது இந்த மாட்டினத்தை படியெடுப்பு முறையில் உருவாக்கியது.


தோற்றம்


நாட்டுமாடுகளானது இந்திய காட்டெருதுவில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. சிலசமயம் அதன் துணையினமாகவும் கருதப்படுகிறது.


மட்பாண்டங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகளின்படி ஏறக்குறைய கி.மு. 2000 காலகட்டத்தில் இந்த இனமானது எகிப்தில் இருந்தது என்றும், அது கிழக்கு அல்லது தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இவை சகாரா கீழமை ஆபிரிக்காவில் 700 மற்றும் 1500க்கு இடைப்பட்ட காலத்தில் முதலில் இருந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஏறக்குறைய 1000இல் ஆப்பிரிக்காவின் கொம்புவில் அறிமுகமாயின.


இனங்கள் மற்றும் கலப்பினங்கள்


நாட்டு மாடுகளில் இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆப்பிரிக்க இனங்கள் என மொத்தம் சுமார் 75 வகைகள் உள்ளன. உலகின் முதன்மையான நாட்டு மாடுகளாக கிர், காங்ரேஜ் மற்றும் குஸ்ராத், இந்தோ பிரேசிலியன், பிரம்மன், நெல்லூர், ஒங்கோல், சாகிலால், சிவப்பு சிந்தி, பட்டானா, கெனனா, போர்ன், பாகாரா, தர்பர்கார், காங்கேயம், தென் மஞ்சள், கெடா-கெலந்தன் மற்றும் உள்ளூர் இந்திய பால் மாடு போன்றவை உள்ளன. கேடா-கெலந்தன் மற்றும் லீட் போன்றவை மலேசியாவில் உருவானவை.


ஆபிரிக்க சங்கா மாட்டு இனமானது பழங்கால ஆப்பிரிக்க இன மாடு மற்றும் நாட்டு மாடு ஆகியவற்றின் இனக்கலப்பால் உருவானது; இதில் ஆப்பிரிக்கானர், ரெட் ஃபுலானி, அன்கோல்-வூட்டீஸ், மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆபிரிக்காவின் பல இனங்களின் அடங்கும்.


வெளி இணைப்புகள்

நாட்டு மாடு – விக்கிப்பீடியா

Zebu – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.