தேனி மலை மாடுகள் தேனி மலைப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருக்க கூடியது. இந்த இனத்தில் கரும்போர், செம்போர் எனக் கூடிய உடம்பில் வண்ணமுள்ள மாடுகள் காணப்படும். இதனுடைய காளைகள் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்குச் சிறந்தவை எனக் கருதப்படுகிறது. என்றாலும், அண்மை காலம் வரை தேனி மலை மாடுகள் பல கிராமத்தினர் சேர்ந்து நடத்தும் ஜல்லிக்கட்டில் பெரும்பாலும் கலந்து கொண்டதில்லை. கிராம அளவில் நடத்தப்படும் மஞ்சு விரட்டில் இம்மாடுகள் கலந்து கொள்வது வழக்கம். முன்பு, வனப்பகுதிகளில் மலைமாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட வனத்துறை மறுத்து வருவதால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
About the author
Related Posts
September 20, 2021
மதுரை வாலாட்டிப்பாம்பு
September 20, 2021
இருதலைப்பாம்பு
September 30, 2021