வெள்ளாடு என்பது ஒரு வளர்ப்பின ஆடு ஆகும். இந்தியாவில் மட்டும் 19 இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் தமிழ்நாட்டில் கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கருப்பு ஆகிய இனங்கள் உள்ளன. பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்கா மொரோக்கோ நாட்டில் மரத்தில் ஏறி மேயும் வெள்ளாடுகளும் உள்ளன.
வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடு தழைகளை மேயும். குருபாடு புல்லை மேயும். துரு, துருவை என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மயிரடர்ந்த காட்டாடும் வளர்க்கப்படும் வீட்டு விலங்காக வளர்க்கப்படுகிறது. வெள்ளாட்டைக் கயிற்றில் கட்டிக்கொண்டு மேய்ப்பர். குரும்பாடும் செம்மறியாடும் மந்தை மந்தையாக மேய்க்கப்படும். பலவகையான இலை தழைகளை மேய்வதால் வெள்ளாட்டுப்பால் மருத்துவக் குணம் உள்ளது; குடற்புண்ணை ஆற்றும்.[சான்று தேவை] மகாத்மா காந்தி வெள்ளாட்டுப் பாலை விரும்பி உண்டுவந்தார்.
வெள்ளாட்டுத் தீவனம்
பொதுவாக வெள்ளாட்டுக்கான தீவனத்தை ஐந்து வகையாக பிரிக்கலாம்.