குரும்பை ஆடு அல்லது கோயம்புத்தூர் ஆடு என்பது வட தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால் முதலில் வளர்க்கப்பட்ட ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை இறைச்சி மற்றும் முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது இதன் ரோமங்களில் இருந்து கம்பளி உற்பத்தி செய்யப்படுகிறது.
இவை பொதுவாக வெண்மை நிறம் கொண்டவையாகவும், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தோடும் காணப்படும். இவற்றின் 30 விழுக்காடு பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் இருக்காது. வளர்ந்த கிடா 25 கிலோ கிராம் எடையுடனும் பெட்டை 20 கிலோ கிராம் எடையுடனும் இருக்கும் .