திருச்சி கருப்பு ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவும், முரட்டு ரோம உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் திருச்சி, பெரம்பலூர், தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன.
விளக்கம்
இவை சிறிய உடலமைப்பைக் கொண்டதாகவும், உடல் முழுவதும் கருமை நிறம் கொண்டதாகவும் இருக்கும். இவற்றில் கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை. இவற்றின் காதுகள் சிறியதாகவும், முன்னோக்கியும், கீழ்நோக்கியும் இருக்கும். வளர்ந்த கிடா 26 கி.கி எடையுடனும் பெட்டை 19 கி.கி எடையுடனும் இருக்கும்.