வேம்பூர் ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, நாகலாபுரம் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்திலும் காணப்படுகின்றன.
விளக்கம்
இவை உயரமாகவும், வெள்ளை நிற உடலில், பழுப்பு அல்லது சிவப்பு நிறத் திட்டுகள் கொண்டும், தொங்கும் காதுகளோடு, குட்டையான மெலிந்த வாலுடனும் காணப்படும். இந்த ஆட்டுக் கிடாக்களுக்கு திருகிய கொம்புகள் உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை. வளர்ந்த கிடா 35 கி.கி எடையுடனும் பெட்டை 28 கி.கி எடையுடனும் இருக்கும்.