மாடு (ஆங்கிலத்தில் cattle என அழைக்கப்படும்) அல்லது பசு (பசு என்பது மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர்)
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். இந்தியாவில் மட்டும் அண்ணளவாக 300 மில்லியன் மாடுகள் உள்ளன.
இனங்கள்
மாடுகள் பொதுவாக மூன்று பாரிய பிரிவுகளாகக் காணப்படுகின்றன: அவற்றில் ஒரு வகையானது போஸ் டாரஸ் (Bos taurus) என்பதாகும், இது ஒரு வகை ஐரோப்பிய இன எருதாகும் (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது). இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu) என்பதாகும். மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகும். இவையே மேலே குறிப்பிட போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் மூதாதைய இனமாகும். சமீபத்தில், மாடுகளின் போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் மூவகை இனமாடுகளையும் ஓரின மாடுகளாகச் சேர்த்துவிட்டனர். எனினும் குழுவாக்கப்பட்ட ஓரினம் தற்போது இவ்வாறு Bos primigenius taurus, Bos primigenius indicus,Bos primigenius primigenius பிரிக்கப்பட்டுள்ளது.
சமயங்களில் மாட்டின் இனங்கள்
புராணங்களின்படி காமதேனுவும் (புனிதத்தின் சின்னம்) , நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். புதுமனை புகுதல் நிகழ்விற்கு முதல் நாளில் இந்துக்கள் தம் வீடு புனிதமடைவதற்காக வெள்ளைப் பசுவை வீட்டில் கட்டிவிடும் மரபைக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில்
கோ என்றால் அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்று இந்திய வரலாறு கூறுகிறது. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. மாடு என்றால் செல்வம் என்று பொருள். ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர். தற்பொழுது இந்தியாவில் மாடு தரும் பொருட்கள் வர்த்தகத்தில் 3 ஆவது இடத்தில் உள்ளது.
மாடு என்று எல்லோராலும் பொதுவாக அழைக்கப்படும் இந்த விலங்கு இந்தியா மட்டுமல்லாது உலகின் எல்லா நாட்டினருக்கும் முக்கியமான வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய விலங்கு ஆகும்.
இவ்விலங்கின் பால் மனிதனுக்கு மிக உபயோகமான மற்றும் அடிப்படையான திரவ உணவாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து மிகுந்த திரவ உணவாகும்.
இதன் பால் மட்டுமின்றி இதன் பயன் கணக்கிலடங்காதது. ஆண் விலங்கு எருது என அழைக்கப்படுகிறது. நிலத்தில் பயிர் செய்ய ஏதுவாக அதனை உழுவதற்கு பயன்படுத்தி உழுகிறார்கள்.
பாரவண்டி இழுக்கவும் இவ்வெருதுகள் பயன்படுகின்றன. மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி தற்போது இந்தியாவிலும் இதன் இறைச்சி உண்ணப்படுகிறது. ஆனால் பெண் விலங்காகிய பசுவினை இந்தியர்கள் (குறிப்பாக இந்துக்கள்) உண்பதில்லை.
பசு இந்தியர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்துக்கள் இவ்விலங்கினைத் தெய்வமாக வழிபடுகின்றனர். இதன் பால் இந்து கடவுளுக்கு அபிசேகம் செய்யவும் பிரசாதமாகவும் படைக்கப்படுகிறது.
தமிழகத்தில் காணப்படும் மாடுகளின் வகைகள்
உற்பத்திகள்
மாட்டு இறைச்சி உற்பத்தி
மாட்டுப் பால் உற்பத்தி
மாட்டுத் தொகை
உலக மாட்டுத் தொகை 1.3 பில்லியன் ஆகும். கீழ்வரும் அட்டவணையில் 2009 இல் கணக்கிடப்பட்ட மாட்டுத்தொகை காட்டப்பட்டுள்ளது.
2003 இல், ஆபிரிக்க கண்டத்தில் 231 மில்லியன் மாடு ஆயர்கள் காணப்பட்டுள்ளனர், பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் அல்லாத ஆகிய இரண்டுமே வளர்க்கப்பட்டது, ஆனால் பெரும்பாலும் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் ஒரு “ஒருங்கிணைந்த” பகுதியாக இருக்கின்றன.
குணங்கள்
பசு
பசு பொதுவாக பெண் மாட்டினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. குளம்புள்ள பெரிய அளவிலான வீட்டு விலங்கு வகையைச் சேர்ந்த இது, போவினே என்னும் துணைக்குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக கருதப்படுகின்றது. போஸ் என்னும் பேரினத்தின் மிக பரந்த இனமாவதோடு, போஸ் ப்ரைமிஜீனியஸ் என்னும் கூட்டு வகையைச் சேர்ந்ததாகும். பால் ஈன்ற கூடிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கறவை மாடான பசு, சமய ஈடுபாடுடன் தொடர்புடைய விலங்காகவும் போற்றப்படுகிறது.
சில வகைகள்
இந்தியா முழுவதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக 26 வகை மாடினங்கள் காணப்படுகின்றன. கறவை மாடுகளில் சில பிரதான வகைகளை பற்றிய குறிப்புகளை பின்வரும் பகுதியில் காணலாம். பசுக்கள் நீண்ட நாட்களுக்கு பால் கொடுக்கும் திறன் உடையவை. திடமான உடலமைப்பும் வலிமையான கால்களும் கொண்டவை. அவற்றில் சில இனங்களை கீழே காணலாம்.
சிந்தி
இவை சிவப்புச் சிந்தி, சிவப்புக் கராச்சி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுபவை. கராச்சி மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் பரவலாக காணப்படுபவை. நடுத்தர அளவிலான உருவமும், அடக்கமான உடலமைப்பும் கொண்டவை. இவற்றின் கொம்புகள் தடிப்பாகவும், பக்கவாட்டிலிருந்து முளைத்தும், மழுங்கிய முனைகளுடனும் காணப்படும். இவ்வின காளைகள் பசுக்களை காட்டிலும் அடர்ந்த நிறத்தை கொண்டவை. திமில் கொண்டு காணப்படும் இந்த வகுப்பை சேர்ந்த பசுக்கள், சிறிய அளவிலான காம்புகைளைக் கொண்ட பெரிய மடியுடன் தென்படுபவை. சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பவை. உண்ணி போன்ற பூசிக்கடிகளையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய ஆற்றல் உடையவை. இந்தியாவிலுள்ள கறவை இனங்களிலேயே சிக்கன செலவில் அதிக பாலை சுரக்கும் வல்லமை கொண்ட மாடுகளாக சிந்தி மாடுகள் கருதப்படுகின்றன. ஒரு கறவை காலத்தில் 5443 கிலோ பாலை கொடுக்கும் திறனுள்ளவை.
கிர்
கத்தியாவாரி, சுர்தி போன்ற பெயர்களாலும் இவை அறியப்படுபவை. தென் கத்தியவாரைச் சார்ந்த கிர் காடுகளில் தோன்றிய இனமாகும். கலப்பு கிர் மாடுகள் பரோடாவிலும் மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. முழுமையாக ஒரே நிறத்தில் அல்லாமல், சிவப்பு, கருஞ்சிவப்பு, வெண்மை கலந்த சிவப்பு, அல்லது சிவப்பு புள்ளிகளுடனான பாங்கினை உடையவை. தெளிவான கோடுகள் காணப்படும் சிறந்த உடற்கட்டுடன் கம்பீர தோற்றமுடையவை. காதுகள் இலை வடிவிலும், வால் சாட்டை போல நீளமாகவும், கால்கள் நீளமாகவும் உருண்டு திரண்டும் இருக்கும். இவ்வினத்தைச் சேர்ந்த காளை மாடுகள் கனமாகவும், சக்தி வாய்ந்தவையாகவும், அதிக இழுக்கும் திறன் கொண்டும் காணப்படும். கறவை மாடுகள் ஒரு கறவைக் காலத்தில் அதிகபட்சமாக 3715 கிலோ எடை அளவிற்குப் பாலை கொடுக்கிறது.
பசும்பால்
பசு பெரும்பாலும் அது ஈனும் பாலுக்காகவே வீட்டு விலங்காக வளர்க்கப்படுகிறது. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். உலகம் முழுதும் 6௦௦ கோடி பேர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்கின்றனர். சுமார் 1.5 கோடி மக்கள் பால்பண்ணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில் பால் உற்பத்தி 5௦ விழுக்காடுகள் அதிகரித்துள்ளது. 2௦11 FAOவின் மதிப்பீடின்படி உலகம் முழுவதும் உற்பத்தியாகும் பாலில் 85 சதவீதம் பசுமாடுகளிடமிருந்தே பெறப்படுகிறது.
உலகளவில் அமெரிக்கா பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தியா, சீனா, பிரேசில், மற்றும் ரஷ்யா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 197௦ஆம் ஆண்டு முதல் தெற்கு ஆசியா பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஆப்ரிக்காவின் பால் உற்பத்தி மிகவும் மெதுவான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.
1௦௦ கிராம் பாலில் உள்ள போஷாக்கு விவரம்
பால் கொழுப்பு சதவீதங்கள்
தமிழ் இலக்கியத்தில் பசு
சமய வழிபாடு
1966 ஆம் ஆண்டின் துப்பாக்கிச் சூடு
இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது.
சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. (பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.) இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள்,தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.
திருப்பூர் அருகிலுள்ள போயம்பாளையத்தில் கங்கோத்ரி கோ சேவா சமிதி, பசு பராமரிப்பு அமைப்பை ஏற்படுத்தி கடத்தப்படும்போது காப்பாற்றப்பட்ட பசுக்கள், கன்றுகள், எருமை மற்றும் காளைகளை பராமரித்து வருகின்றது.காவல்துறையினர் இவைக் கடத்தப்படும்போது காப்பாற்ற உதவுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகர் முஸ்லீம்கள் பசுவதைக்கு எதிரான உறுதிமொழியை மேற்கொள்கின்றனர். மதுராவில் இஸ்லாமியா இண்டர் கல்லூரியில் 2013 ஜூன் 9 இல் பசுவதைத் தடுப்பு மாநாட்டை அப்துல் ஜப்பார் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.