பாஷ்மினா ஆடு என்பது திபெத் பீடபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளான திபெத் மற்றும் இந்தியாவின் காசுமீர் பகுதியைச் சேர்ந்த லடாக்கில் காணப்படும் ஒரு ஆட்டினமாகும். இமய மலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் இந்த ஆடுகள் வாழ்கின்றன. குளிரைத் தாங்குவதற்கு ஏற்ப மென்மையான அடர் ரோமங்கள் இந்த ஆடுகளுக்கு உள்ளன. இந்த ஆட்டின் ரோமங்கள் 12-14 மைக்ரான் தடிமனில் மிக மென்மையாக இருப்பதால் இந்த ஆட்டின் ரோமங்களில் இருந்து செய்யப்படும் பாஸ்மினா சால்வைகளும், கம்பளங்களும் அதன் மென்மைத் தன்மைக்கு உலகப் புகழ்பெற்றவை. தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த இன ஆடுகள் அழியாமல் இருப்பதற்கான முயற்சியைக் காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை எடுத்து, குளோனிங் முறையில் பாஷ்மினா ஆட்டை இந்தப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அன்று குளோனிங் முறையில் இந்த ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆட்டிற்கு நூரி எனப் பெயர் வைத்துள்ளார்கள்.
About the author
Related Posts
October 11, 2021
எலிசிடர் புருசுலர்
October 5, 2021
பெரும் பூநாரை
September 27, 2021