ரெட் டேன் மாடு என்பது ஒரு வட ஐராப்பிய பால் மாட்டு இனமாகும். இது டென்மார்க்கை பிறப்பிடமாக கொண்ட மாடு. இந்த சாதி பசுக்கள் டென்மார்க்கில் 42.599 உள்ளன. இவை தங்கள் பால் கறப்புக்கு பயன்படுத்தப்பட்டு வாழ்நாள் முடியும் காலத்தில் மாட்டிறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
விளக்கம்
இவற்றின் உடல் நிறம் சிவப்பு நிறத்துடனோ அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனோ அல்லது அடர்ந்த பழுப்பு நிறத்துடனோ காணப்படும் இவை அளவில் பெரிய மாட்டினமாகும். வளர்ந்த காளைகள் 950 கிலோ உடல் எடை வரையும், பசு மாடுகள் 600 கிலோ வரையான உடல் எடையுடன் இருக்கும் மாடுகளின் பால் உற்பத்தி 3000-4000 கிலோக்களாக, 4 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்புச்சத்து கொண்டிருக்கும்.