தீவனி மாடு

தீவனி மாடு (Deoni (கன்னடம்:ದೇವನಿ/மராத்தி:देवनि) என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாட்டினமாகும். இவை கர்நாடக மாநிலத்தின் பிதர் மாவட்டத்தின் பசவகல்யான், பிதார் வட்டங்கள் மற்றும் அதை ஒட்டி மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டத்தின் பால்கி வட்டம் ஆகிய பகுதியை பூர்வீகமாக‍க் கொண்டவை.


இந்த மாடுகள் நல்ல பால் தருவனவாகவும் உழைப்புத் திறனைக் கொண்டனவாகவும் உள்ளன. இவற்றை இந்த இரண்டு தேவைகளுக்காகவும் இந்தியாவில் வளர்க்கின்றனர். இந்த மாடுகள் முன்னாள் ஐதராபாத் மாநிலத்தில் இருந்து பிரிந்த பகுதிகளான தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் அண்டை மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த மாடுகளை பால் தேவைக்காக ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி மாடுகளுடன் கலப்பு செய்யப்படுகின்றன.


விளக்கம்


இந்த மாடுகளின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவை முதல் கன்றை ஈனும் வயது 894-1540 நாட்களாக (சராசரியாக 940 நாட்கள்) இருக்கும் கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.


வெளி இணைப்புகள்

தீவனி மாடு – விக்கிப்பீடியா

Deoni cattle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.