கிர் மாடு (Gir cow) என்பது இந்தியாவின், நாட்டு மாட்டு வகைகளுள் ஒன்று. இவை உருவில் பெரியவையாகவும், பார்ப்பதற்கும் எழிலார்ந்தவையாகவும் உள்ளவை.
பூர்விகம்
இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது. இவ்வகை மாடுகள் பெருமளவில் அழிந்துவிட்டதால் குஜராத் மாநில அரசு பிரேசில் நாட்டிடமிருந்து இந்த மாடுகளின் 10,000 உயிரணு குப்பிகளை வாங்கி இனப்பருக்கம் செய்ய 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மாடுகளை இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் பாவ்நகர் மகாராஜா பிரேசில் நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் பரிசாக வழங்கிய கிர் மாடுகளின் வாரிசுகள் அங்கே அதிகமாக வாழுகிறது.