ஹள்ளிகார் மாடு

ஹள்ளிகார் (Hallikar (கன்னடம்:ಹಳ್ಳಿಕಾರ್) என்பது இந்தியாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு மாட்டினமாகும். இந்த மாட்டினங்கள் கர்நாடகத்தின் தென் மாவட்டங்களான மைசூர் மாவட்டம், மண்டியா மாவட்டம், ஹாசன் மாவட்டம் , தும்கூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. இவற்றின் கொம்புகள் நீண்டு, பின்பக்கமாக சற்று வளைந்ததாக இருக்கும், காளைகளின் திமில் உயரமானதாகவும், உடல் சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும். இம்மாடுகள் சாம்பல் நிறமாக இருக்கும். இந்த மாடுகள் அவற்றின் வலிமை மற்றும் பொறுமை ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. இந்த இனக் காளைகள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை. இது முன்னாள் சுல்தான்களினதும் மைசூர் இராஜ்ஜிய மன்னர்களினதும் ஆதரவைப் பெற்ற இரண்டு மாட்டினங்களில் ஒன்றாக இருந்தது, இன்னொரு மாட்டினம் அம்ரித் மகால் ஆகும். இந்த பாரம்பரிய மாட்டினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்திய அரசாங்கத்தின், அஞ்சல் துறை 2000 ஆம் ஆண்டு இந்த மாட்டின் படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.


வெளி இணைப்புகள்

ஹள்ளிகார் மாடு – விக்கிப்பீடியா

Hallikar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.