காசர்கோடு குள்ள மாடு ((மலையாளம்: കാസർഗോഡ് കുള്ളൻ പശു/கன்னடம்: ಕಾಸರಗೋಡು) என்பது இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இந்த மாடு கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் மலைத் தொடர்களை பூர்வீகமாகக்கொண்டவை. இந்த மாடுகள் நல்ல கறவைத் திறன் பெற்றவையாகவும், கூடுதலான கணிம வளம் கொண்ட பாலை அளிப்பவையாகவும் உள்ளன. இந்த மாடு இந்தியாவில் உள்ள மூன்று குள்ள மாட்டு இனங்களில் ஒன்றாகும். இதர குள்ளமாடுகள் மலநாடு கிட்டா மற்றும் வெச்சூர் மாடு ஆகும்.
வெளி இணைப்புகள்
காசர்கோடு குள்ள மாடு – விக்கிப்பீடியா
Kasaragod Dwarf cattle – Wikipedia