கிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு (கன்னடம்:ಕೃಷ್ಣಾತೀರಿ) என்பது இந்தியாவின் வட கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த ஒரு மாட்டு இனமாகும். இந்த மாடுகள் கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறுகளான காட்டபிரபா, மலப்பிரபா போன்றவை பாயக்கூடிய பிஜாப்பூர் மாவட்டம், பாகல்கோட் மாவட்டம், பெல்காம் ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாகக்கொண்டவை. இந்த மாடுகள் முதன்மையாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு உழைப்பு விலங்கு இனமாகும். இந்தக் காளைகள் வலிமை மற்றும் பொறுமை கொண்டதாக அறியப்படுகிறது. இந்த இனப் பசுக்கள் மிதமான பால் சுரக்கும் தன்மை கொண்டவை.
விளக்கம்
இம்மாடுகள் பெரிய உடலமைப்பும், நல்ல தசைப்பிடிப்புகளுடன் இருக்கும். இந்த இனத்தைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும் இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படும், இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
வெளி இணைப்புகள்
கிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு – விக்கிப்பீடியா