மக்ரா செம்மறியாடு (Magra sheep) என்பது இந்தியாவில் காணப்படும் ஒரு செம்மறி ஆட்டு இனமாகும். இவை பிக்கனேரி சொக்கலா அல்லது சக்ரி என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டம், நாகவுர் மாவட்டம், ஜெய்சால்மர் சுரு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறன. என்றாலும், இந்த ஆடுகளில் கலப்பில்லாத தூய ஆடுகள் பிகானீர் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. இந்த ஆடுகள் மட்டுமே பளபளக்கும் கம்பள கம்பளியைத் தரும் இனம் என அறியப்படுகிறது. மக்ரா ஆடுகளின் மிக முக்கியமான திரிபு ஆட்டு மந்தைகள் பிகானீரை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் மட்டுமே காணலாம் இது மிகவும் வெள்ளையானதாகவும் பளபளக்கும் ரோமங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த இனத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வளர்ப்பு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிகானீர் வளர்ப்பவர்கள், கம்பளி வணிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் இந்த இன செம்மறிகளின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது குறித்து கவலைப்படுகின்றனர். மேலும், பிற பகுதிகளில் உள்ள வேற்று ஆடுகளுடன் கலப்பு ஏற்படுவதால் இந்த ஆடுகளின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு இனத்தூய்மையான ஆடுகளின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
About the author
Related Posts
July 13, 2021
வேப்பமரம்
September 28, 2021
சேலம் கருப்பு ஆடு
September 27, 2021