மலைநாடு கிட்டா (ஆங்கிலம்: Malnad Gidda, கன்னடம்: ಮಲೆನಾಡು ಗಿಡ್ಡ) எனப்படும் மாடுகள் இந்தியாவைச் சேர்ந்த குள்ள மாட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த மாடுகள் கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான மலை நாடு பகுதியில் வாழக்கூடியன. இந்த மாடுகள் உரதனா (கன்னடம்: ಊರದನ) மற்றும் வர்ஷகந்தி (கன்னடம்: ವರ್ಷಗಂಧಿ) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகள் குள்ளமாகவும் நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றின் பால் மற்றும் சிறுநீர் ஆகியவை மருத்துவ மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. இந்த மாடுகள் கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் காடுகள் ஆகியவற்றை நம்பியே தாக்குப்பிடித்து வாழ்கின்றன. இந்த மாடுகள் கறுப்பு, பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. இவை மிகுந்த கூச்ச உணர்வு உடையவை. இது ஒரு தனித்துவமான மாட்டு இனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
About the author
Related Posts
October 8, 2021
ஈப்பிடிப்பான்
September 30, 2021
எலும்புண்ணிக் கழுகு
October 7, 2021