மால்வி மாடு (Malvi or Malavi) என்பது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒரு மாட்டு இனமாகும். இவ்வின மாடுகளின் வேறு பெயர்கள் மந்தானி மகாதியோபுரி (Manthani or Mahadeopuri) ஆகும். இவை நடு இந்தியாவில் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பீடபூமியை பூர்வீகமாகக்கொண்டவை. இது ஒரு நல்ல உழைக்கும் மாட்டு இனம்; இந்த மாடுகளில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும்.:3 இந்த இன மாடுகள் மத்தியப் பிரதேசத்தின் ஷஜாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாடு வளர்ப்பு பண்ணையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
About the author
Related Posts
September 28, 2021
ஜப்பானிய முயல்
October 11, 2021
மர வாத்து
October 5, 2021