மிவாட்டி மாடு (Mewati), அல்லது கோசி மாடு என அழைக்கப்படுவது, இந்தியாவில் உள்ள ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இவை அரியானா மாநிலத்தில் உள்ள பிரதேசமான மிவாட்டியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகள் கிர் மாடுகள் மற்றும் ஹர்யானி மாட்டினங்களுடன் தொடர்புடைய இனங்களாகும். இந்த மாடுகள் கிட்டத்தட்ட அனைத்துமே வெண்மை நிறத்தில் உள்ளன அரிதாக சிலமாடுகள் பழுப்பு நிழல்கள் கொண்டதாக இருக்கின்றன. இவை நல்ல பால் கறக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் பெற்றதால் இந்த இரண்டு பயன்பாட்டுகளுக்குமாக இவை வளர்க்கப்படுகின்றன. இந்த எருதுகள் வலிமை மற்றும் பொறுமைக்காக அறியப்படுகிறது. இவற்றை விவசாய மற்றும் மாட்டுவண்டி வேலைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
About the author
Related Posts
October 11, 2021
சிராசர் புறா
October 11, 2021
உரல் கோடிட்ட பிடரி புறா
October 6, 2021