நீலகிரி செம்மறியாடு என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் ஒரு செம்மறி ஆட்டு இனமாகும். இது நீலகிரி மலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் ஆனவை மேலும் இவை அவற்றிலிருந்து கிடைக்கும் தரமான கம்பளிக்காக அறியப்படுகிறன. அதன் கம்பளி இழைகளிலிருந்து கம்பளிப் போர்வைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை ஆண்டுக்குச் சுமார் 1 கிலோ கம்பளியைத் தரும் வல்லமை கொண்டவை. தமிழ்நாட்டில் உள்ள இனங்களில் மென்மையான கம்பளி உரோமம் தரும் ஒரே இனம் இது மட்டுமே. இந்த ஆடுகளை அழிவிலிருந்து காக்க விலங்கு மரபியல் பாதுகாப்பு தேசிய பணியகத்தால். தேசிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விளக்கம்
இவை நடுத்தர உடலமைப்பைக் கொண்டவை. பெரும்பாலும் வெண்மை நிறத்தில் காணப்பட்டாலும், சில ஆடுகளில் உடல் மற்றும் முகம் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவற்றின் காதுகள் அகன்ற தொங்கங்கூடியன, பெட்டை ஆட்டுக்குக் கொம்புகள் இருக்காது. வளர்ந்த கிடா மற்றும் பெட்டை ஆடுகள் 31 கி.கி எடையுடன் இருக்கும்.
கம்பளி தரம் மற்றும் உற்பத்தி
இனம் தொடர்புடைய சில புள்ளிவிவரங்கள்: ஆறு மாதங்களுக்கு கிடைக்கும் கம்பளியின் சராசரி எடை 0,615 ± 0,028 ஒற்றை இழையின் சராசரி விட்டம் 27,34 ± 0.077 (μ) கம்பளி அடர்த்தி (செ.மீ .2) 2 199 ± 57