சிவப்பு கந்திரி மாடு (Red Kandhari) உள்ளூரில் லால் கந்திரி என அழைக்கப்படும் இவை இந்தியாவின் நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றாகும். இவை அவற்றின் ஆழ்ந்த சிவப்பு நிற தோலின் நிறத்தால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க இப்பெயரால் அழைக்கப்படுகிறன. இவை மகாராட்டிரத்தின் மராத்வாடா வட்டாரத்தின் நாந்தேட் மாவட்டத்தின், லாத்தூர், கந்தார் வட்டங்கள், பிரபானி மாவட்டப் பகுதிகள், மற்றும் இதை ஒட்டிய வட கர்நாடகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த இன மாடுகளுக்கு 4 கி.பி. இல் கந்தர் பகுதியை ஆண்ட மன்னர் சோமதேவராய அரசின் ஆதரவு இருந்ததாக அறியப்படுகிறது. இந்த மாடுகள் நடுத்தர அளவில் வலுவான தோற்றத்தில் இருக்கும். கந்திரி மாடுகள் பரவலாக முதன்மையாக கடினமான பணிகளுக்காக, பயன்படுத்தப்படுகின்றன.
About the author
Related Posts
October 4, 2021
செதிலிறகுப் பூங்குயில்
September 28, 2021
குறுவால் மரநாய்
September 27, 2021