செம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது.
செம்மறி ஆடு வளர்ப்பானது உலகிலுள்ள பெரும்பாலான மனித குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதுவே பல நாகரீகங்களின் அடிப்படையாக அமைந்திருந்தது. புது யுகத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தெற்கு மற்றும் தென் மத்திய அமெரிக்க தேசங்கள் மற்றும் பிரித்தானியத் தீவுகள் ஆகியன ஆடு வளர்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆடுகளின் குழுவிற்கு மந்தை (herd or flock) எனவும் அதன் இளம் குட்டிக்கு கன்று (calf) எனவும் அழைக்கப்படுகின்றது.பண்ணையத் தொழில் வரலாற்றில் செம்மறியாடு ஒரு முக்கிய விலங்காக இடம்பெற்று வந்திருக்கிறது. மேலும் மனித கலாச்சாரத்துடனுடன் மிக நெருக்காமான இவ்விலங்கு திகழ்கிறது.
பண்புகள்
கொம்புகள்
வளர்ப்புச் செம்மறியாடுகள் சிறு அசைபோடும் பிரானிகளாகும். வழக்கமாக செம்மறியாட்டில் கம்பளி என அழைக்கப்படும் நெருக்கமாக வளர்ந்த உரோமங்கள் காணப்படுகிறது. கொம்புகள் வளர்ந்த பின் சுருண்டு சுருள் வடிவில் காணப்படும். வளர்ப்புச் செம்மறியாடுகள் அதன் மூதாதைகள் மற்றும் தொடர்புடைய காட்டினங்களிலிருந்து பல்வேறு பண்புகளில் வேறுபடுகின்றன. வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற தனித்துவமான மரபியல் பண்புகளால் மனித இனம் இதனை வளர்ப்புப் பிரானியாக தேர்ந்தெடுத்திருக்கக் கூடும் . ஒரு சில பழமையான செம்மறியாட்டு இனங்கள் அவற்றினுடைய காட்டு உறவுமுறை விலங்குகளின் பண்பாகிய குறுகிய வால்கள் போன்ற சில குணாதிசயங்களைத் தக்கவைத்திருக்கின்றன. வருக்கத்தைப் (breeds) பொருத்து பெரும்பாலான செம்மறி ஆடுகளுக்கு கொம்புகள் இருப்பதில்லை. சில இனங்களில் ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புகள் காணப்படுகின்றன. சில இனங்களில் ஆண் செம்மறி ஆடுகளுக்கு மட்டும் கொம்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கொம்புடைய ஆடுகளுக்கு ஒரு சோடி கொம்புகளும் அரிதாக சில இனங்களில் பல கொம்புகளும் காணப்படலாம் .
உரோமம் மற்றும் நிறங்கள்
மற்றொரு தனித்துவமான பண்புக் கூறு நிறம் ஆகும்.செம்மறியின் காட்டு உறவு விலங்குகளிலிருந்து நிறத்தால் பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. காட்டின செம்மறியாடுகளில் நிற மாறுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது அதாவது பெரும்பாலும் பழுப்பு சாயல்களில் மாறுபாடுகள் மட்டுமே காப்படுகிறது. ஆனால் வளர்பின நாட்டுச் செம்மறியாடுகளில் அவற்றுக்குள்ளேயே தூய வெள்ளை முதல் கருமையான இன்னட்டு நிறம் வரையிலான பல்வேறு நிறங்கள் மட்டுமல்லாமல் பழுப்பு மற்றும் சீரான புள்ளிகள் அல்லது திட்டு திட்டாகப் பல வண்ணங்களும் காணப்படுகிறது .எளிதாக நிறமேற்றக்கூடிய வெள்ளை உரோமம் கொண்ட செம்மறி ஆடுகள் பழக்கப்படுத்தக்கூடியதாக இருந்ததாலும் ஆரம்ப நிலையில் இவ்வினங்களே பரலால் வளர்க்க வளர்க்கப்பட்டது. மேலும் மதிப்பு வாய்ந்த வெள்ளைக் கம்பளியும் இதன் விரைவான பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.எனினும், நிறமுடைய ஆடுகளின் பல நவீன இனங்கள் தற்போது வளர்க்கப்பட்டுவருகின்றன. வெள்ளை செம்மறி ஆட்டுமந்தைகளில் ஒரு சில நிறமுடைய ஆடுகளும் குறைந்தளவு காணப்படுகின்றன . இது வெள்ளளைப் பண்புக்குரிய ஒடுங்கிய (recessive) நிலையாகும் .வெள்ளை நிற கம்பளிகள் வணிகச்சந்தைகளில் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால் அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது. உரேமத்தின் இயல்புகள் இனங்களுக்குள்ளேயே அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்டது முதல் நீண்ட முடி போன்றது வரை பரவலாக மாறுபடுகிறது. கம்பளியில் காணப்படும் இது போன்ற வேறுபாடுகள் மற்றும் தரம் ஒரே மந்தைக்குள் இருக்கும் செம்மறியாடுகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே உரோமங்களின் நிறம் அடிப்படையிலான தரம் பிரித்தல் வணிகநோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
உயரம் மற்றும் எடை
இனங்களைப் பொருத்து செம்மறியாடுகளின் உயரம் மற்றும் எடையளவுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. வளர்ச்சி வீதம் மற்றும் முதிர்ச்சியடைந்த செம்மறியாடுகளில் நல்ல மரபுத்தன்மை காணப்படுவதால் இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன .இனச்சேர்க்கைக்காக வளர்க்கப்படும் பெண் செம்மறி ஆடு (Ewes) கிட்டத்தட்ட 45 கிலோகிராம் முதல் 100 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் ஆண் செம்மறி ஆடு (rams) 45 கிலோகிராம் முதல் 160 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் இருக்கும் .
பற்களும் வாழ்நாளும்
செம்மறி ஆட்டினங்களில் அதன் பற்களுக்கும் வாழ்நாளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இளம் செம்மறி ஆட்டில் அனைத்து உதிர்பற்களும் முளைத்திருக்கும் நிலையில் 20 பற்களைக் கொண்டிருக்கும் . முதிர்ச்சியடைந்த செம்மறியில் 32 பற்கள் காணப்படும்.மற்ற அசைபோடும் விலங்குகளைப் பொலவே, கீழ்த்தாடையில் மட்டுமே பற்கள் காணப்படுகிறது. மேல் தாடை ஒரு கடினமான பற்களற்ற மெத்துத் திண்டு போல காணப்படுகிறது.இப்பற்கள் இலை தளைகளை நன்றாகப் பற்றிக்கொள்ள உதவுகிறது. பின்பற்கள் அவற்றை அரைத்து பின்னர் முழுங்குகின்றன. இசைபோடும் விலங்குகளில் எட்டு கீழ்த்தாடை வெட்டுப் பற்கள் காணப்படுகின்றன. ஆனால் எட்டு பற்களில் ஆறைத் தவிர மற்ற இரு பற்கள் மாறுபட்டுள்ளதாக சில சர்ச்சைகளும் உள்ளன. செம்மறி ஆட்டிற்கு 0.0.3.3 4.0.3.3 {\displaystyle {\tfrac {0.0.3.3}{4.0.3.3}}} அல்லது 0.0.3.3 3.1.3.3 {\displaystyle {\tfrac {0.0.3.3}{3.1.3.3}}} என்ற ஒருங்கமைப்பு முறைப் படி பற்கள் காணப்படுகின்றன.
முன்வாய்ப் பற்களுக்கும் (incisors) பின் கடைவாய்ப்பற்களுக்கும் (molars) நீண்ட பல் இடைவெளி (diastema) காணப்படுகிறது. செம்மறிஆட்டின் ஆரம்ப வாழ்நாளில் முன்வாய்ப்பற்களைக் கொண்டு அதன் வயதை ஒருவரரல் எளிதாகக் கணித்துக் கூறிவிட முடியும்.ஒவ்வொரு ஆண்டும் பால் பற்கள் ஒரு ஜோடி பெரிய நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டுக் கொண்டே வரும். இவ்வாறு எட்டு நிரந்தரப் பற்கள் முழு தொகுப்பும் மாற்றப்பட்டிருக்கும் போது செம்மறியின் வயது சுமார் நான்கு ஆண்டுகளாக இருக்கும்.
பின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க முன் பற்களை இழந்து கொண்டே வரும். இது ஆட்டின் உணவு உட்கொள்ளுவதும் உணவை அசை போட்டு அரைப்பதும் அவைகளுக்கு கடினமாவதுடன் உடல்நிலையிலும் உற்பத்தியிலும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக வளர்க்கப்படும் செம்மறி நான்கு வயதுக்குப் பின் முதுமையை நோக்கி நகரத்தொடங்குகின்றன. செம்மறி ஆட்டின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் என்றாலும் சில செம்மறி ஆடுகள் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடும்
செம்மறி ஆடுகளுக்கு நன்றாக கேட்கும் திறனும் இரைச்சலுக்கு பயந்து எதிர்வினை ஆற்றும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. .
பயன்கள்
வகைகள்
தமிழ் நாட்டில் வகைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் செவ்வாடு, ராமநாதபுரம் மாவட்டம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படும் பட்டணம் ஆடு, மதுரை மாவட்டத்தில் காணப்படும் கச்ச கத்தி ஆடு என இந்த 3 இனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டவையாக உள்ளது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளில் செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படுகிறது. இவற்றோடு சேர்த்து சென்னை பகுதியில் சிவப்பு ஆடு, திருச்சிப் பகுதியில் காணப்படும் கருப்பு ஆடு, சேலம் பகுதியில் காணப்படும் மேச்சேரி ஆடு, கோவை பகுதியில் குரும்பை ஆடு, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி ஆடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, மேலும் கீழக்கரிசல் ஆடு என 8 வகையான ஆடுகள் பாரம்பரிய ஆடுகள் ஆகும்.
தயாரிப்பு மற்றும் நுகர்வுகள்
ஆட்டிறைச்சி நுகர்வு
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு OECD- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு FAO ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு