சோமாலிய வெள்ளாடு (Somali goat) என்பது சோமாலியா , சீபூத்தி மற்றும் வடகிழக்கு கென்யாவில் தோன்றி ஆடு வகைகளுள் ஓர் இனமாகும். இது இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். இவற்றின் காதுகள் சிறியவையாகவும், உடலில் காணப்படும் உரோமங்கள் குட்டையாகவும் காணப்படும். பொதுவாக வெள்ளை நிறத்துடன் காணப்படும் ஆடுகள், சில நேரங்களில் புள்ளிகளுடன் காணப்படும். ஆண் பெண் என இரு ஆடுகளுக்கும் கொம்புகள் உண்டு. இருப்பினும் பெண் ஆட்டின் கொம்பு உச்சியினை நோக்கிக் காணப்படும். வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய இந்த ஆடுகள், எப்பொழுதாவது பாலிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தினசரி மூன்று கிலோ கிராம் வரை பால் தருவன.
வெளி இணைப்புகள்
சோமாலிய வெள்ளாடு – விக்கிப்பீடியா