காட்டு ஆடு (wild goat, Capra aegagrus) என்பது ஐரோப்பாவில் இருந்து சின்ன ஆசியா முதல் நடு ஆசியா வரையும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் ஓர் ஆட்டினம். இதுவே வீட்டு ஆடுகளின் மூதாதை ஆகும்.
காட்டில் இவ்வாடுகள் 500 எண்ணிக்கை வரையிலான கூட்டமாக வாழும். கிடாக்கள் தனியாகவே இருக்கும். காட்டு ஆடுகளின் சினைக்காலம் 170 நாட்கள். பொதுவாக ஆடு ஒரு குட்டியையே ஈனும். குட்டிகள் பிறந்தவுடனே தாயைப் பின்தொடரும் திறன் பெற்றவை. இவ்வாடுகளின் வாழ்நாள் 12 முதல் 22 ஆண்டுகள்.