தென்னாப்பிரிக்காவில் வாழும் ஆர்ட்வாக் (Aardvark) என்னும் இப்பிராணியை போயா்கள் ‘நிலப்பன்றி’ என்று அழைப்பாா்கள். பாா்வைக்கு மிகவும் அவலட்சணமான பிராணி இது. மூன்று நாலடி நீளமுள்ள பருத்த உடல். பன்றி போன்ற முகம். இதன் தலை மட்டும் இரண்டடி இருக்கும்.
சுமாா் இரண்டடி நீளமான வால். வாலால் தட்டி மனிதா்களைக் கூட கீழே தள்ளி விடுமாம். கரையான் இதன் முக்கியஉணவு. இதற்கு “எறும்புக் கரடி” என்றும் பெயா் உண்டு. புழு போன்ற நீளமான சிவந்த நாக்கு இதற்கு உண்டு. இது இரவில் மட்டும் தான் வெளிவரும். பகலில் தனது வளைகளில் பதுங்கிக் கிடக்கும். இது வேகமாக மண்ணைத் தோண்டும். நான்கு ஐந்து மனிதா்கள் சோ்ந்து தோண்டுவதை விட வேகமாக இது குழி பறிக்குமாம். இது எதிாிகள் நெருங்கி வந்தால் அவற்றின் கண்முன்னே குழி தோண்டி ஒளிந்து கொள்ளும். இதற்கு முக்கிய எதிாி மலைப்பாம்புகள்.