அய் அய் லெமூர்

அய்-அய் ஆபிரிக்கா கண்டத்தின் மடகாஸ்கர் தீவுப் பகுதியின் காடுகளில் வாழும் லெமூர் இனத்தின் மிகச்சிறிய பாலூட்டி விலங்கு ஆகும். இது அநேகமாக உலகின் விசித்திரமான பாலூட்டியாகும். அதன் பேய் அம்சம் அதற்கு அதன் பெயரைக் கொடுத்தது: லத்தீன் மொழியில் லெமூர் என்ற சொல்லுக்கு “இரவு ஆவி” என்று பொருள். அய்-அய் விலங்கின் கைகளில் உள்ள நடு விரல் மற்ற விரல்களை விட மிக நீளமானது, மேலும் இது பூச்சிகளின் லார்வாக்களைப் பிரித்தெடுக்க மரங்களின் பட்டைகளை உரித்தெடுக்க பயன்படுகிறது. இதன் முக்கிய உணவான புழு மற்றும் பூச்சிகள் கிடைக்காத போது, காளான்கள், பழங்கள் மற்றும் கொட்டைகளை உணவாகக் கொள்கிறது. இவைகள் மிகப் பெரிய கண்கள், விரிந்த செவிகள், நீண்ட விரல்கள் கொண்டுள்ளது. மடகாஸ்கரின் காடுகளை கண்மூடித்தனமாக வெட்டுவதால், அய்-அய் விலங்குகள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது.


நன்கு வளர்ந்த அய் அய் விலங்கிற்கு 14–17 அங்குலங்கள் (36–43 cm) உடல் பாகமும், 22–24 அங்குலங்கள் (56–61 cm) நீளம் கொண்ட வாலும், 4 pounds (1.8 kg) எடையும் கொண்டிருக்கும். உள்ளது.


வெளி இணைப்புகள்

அய்-அய் – விக்கிப்பீடியா

Aye-aye – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.