மூங்கில் லெமூர் என்பது லெமூர் இனத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர அளவிலான முதனி. இவை மற்ற லெமூர்களைப் போலவே மடகாட்கர் தீவை தாயகமாகக் கொண்டவை.
இது சாம்பல் பழுப்பு நிறத்திலான ரோமத்தினைக் கொண்டிருக்கும். காதுகள் வட்டமாகவும் முடிகளுடனும் இருக்கும். 26-46 செ.மீ நீளமும் 2.5 கிலோ வரை எடையும் இருக்கும். இவை மூங்கில் காடுகள் இருக்கும் இடங்களிலேயே வாழ்கின்றன. மூங்கில் லெமூர் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்பதால் இவை மூங்கில் லெமூர் என்று அழைக்கப்படுகின்றன.
மூங்கில் லெமூர் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். இதன் சினைக்காலம் 135 – 150 நாட்களாகும். இவை 12 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
வெளி இணைப்புகள்
மூங்கில் லெமூர் – விக்கிப்பீடியா