சென்னை முள்ளெலி அல்லது வெற்று வயிறு முள்ளெலி (Bare-bellied Hedgehog/Madras Hedgehog)(விலங்கியல் பெயர் பாரெசினுசு நுடிவெண்டிரிசு) என்பது தென் கிழக்கு இந்தியாவின் வறண்டப் பகுதிகளில் காணப்படும் முள்ளெலி இனம் ஆகும். இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான தமிழ் நாட்டில் மட்டும் காணப்படுகிறது.
சென்னை முள்ளெலி என்ற இம்முள்ளெலிச் சிற்றினம், உலக விலங்கியல் அறிஞரால் அழிந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இவ்வினம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் என்ற சரணாலயத்தில் கண்டறிந்துள்ளனர். இச்சிற்றினத்தைப் பற்றிய ஆய்வு விவரங்கள் அதிகமில்லை. அழியும் நிலையுள்ள முள்ளெலி இனமாக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.