கொலோபசுக் குரங்கு

கொலோபசுக் குரங்கு என்று அழைக்கப்படும் வெள்ளை-கறுப்பு கொலோபசுக் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம்.இது ஆப்பிரிக்காவில் கிழக்கு, நடு, மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இயற்கையாக காடுகளில் வாழ்கின்றது. இக்குரங்குக்கு கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல் இருப்பதால் இதற்கு கொலோபசு என்று பெயர். கிரேக்க மொழியில் ekolobóse (எக்கொலோபொசெ) என்றால் அவன் ஒட்ட வெட்டிக்கொண்டான் (“he cut short”) என்று பொருள். இதனால் தமிழில் இதனை கூழைக் குரங்கு அல்லது கட்டைவிரல் கூழைக்குரங்கு என்றும் கூறலாம் (கூழை = குட்டையாக அல்லது அறவே இல்லாமல் இருப்பது). இதன் உடல் பட்டுநூல் போன்ற மழமழப்பான, மென்மையான கறுப்பு வெள்ளை முடியால் போர்த்தப்பட்டுள்ளது. தலை, முதுகுப்புறம், மற்றும் கை கால்கள் கறுப்பாகவும், தோளில் இருந்து உடலின் இருபுறமும் அள்ளைப்புறத்தில் இருந்து நீண்ட வெண்முடியும் கொண்டுள்ளது. உடலைவிட வால் சற்று நீளமாக இருக்கும். வாலும் வெள்ளையாக உள்ளது. இக் குரங்கின் குட்டிகள் பிறந்தவுடன், முகம், உள்ளங்கை உள்ளங்கால்கள் தவிர மற்றபடி உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். பின்பு ஏறத்தாழ 3-4 மாதங்களுக்குப் பிறகு வளர்ந்த குரங்குக்கான கருப்பு-வெள்ளை முடி அமைப்பைப் பெறுகின்றது. கூழைக்குரங்குகள் (கொலோபசுக் குரங்குகள்) கூட்டமாக வாழ்கின்றன, பெரும்பாலும் ஒரு குழுவில் 5-10 குரங்குகள் இருக்கும். இவை வாழ்நாள் முழுவதும் மரங்களின் கிளைகளிலேயே வாழ்கின்றன. தரையில் இறங்குவது கிடையாது. கூழைக் குரங்கு (கொலோபசுக் குரங்கு) வகையில் ஐந்து இனங்கள் உள்ளன. கறுப்பு-வெள்ளை கொலோபசுக் குரங்கு, சிவப்புக் கொல்லொபசு என்னும் வேறு ஒரு குரங்கினத்துக்கும் உறவான உயிரினம்.


கொலோபசுக் குரங்கு இலை தழைகளையும், பூக்களையும் பழங்களையும் உண்கின்றது. துளிர் இலைகளை விரும்பி உண்கின்றது. பகலில் உணவுண்டு நடமாடும் இனம். இது சிறு குழுக்களாக மரங்களுக்கு மரம் தாவி உணவு உண்டு வாழ்கின்றன. குழுக்களில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 8-10 ஆக இருக்கும். அவற்றுள் ஒன்றோ இரண்டோதான் கடுவன்களாக(ஆண் குரங்குகளாக) இருக்கும். கடுவன்கள் தங்கள் வாழிட வலையத்துக்கான உரிமையை நிலைநாட்டவும் பிற கடுவன்களை எச்சரிக்கவும் உரக்க குரலெழுப்பிக்கொண்டு கிளைகளில் மேலும் மிகக் கீழுமாகத் தாவி தன் வல்லமையைக் காட்டும். கூழைக்குரங்கு இனத்தில் இனப்பெருக்கத்திற்கென்று தனியான காலப்பகுதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் சில இடங்களில் (ஈக்குட்டோரியல் கினீயாவில்) நிறைய பழங்கள் கிடைக்கும் காலமாகிய டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் கறுப்புக் கொலோபசு இனத்தில் இனப்பெருக்கம் நிகழ்வதாக ஓட்டுசு (Oats) என்பார் குறித்துள்ளார். கொலோபசு கருவுற்று இருக்கும் காலம் 175 நாட்கள். பிறக்கும் பொழுது குட்டிகளின் எடை 820 கிராம். ஆறுமாதம் தாய்ப்பால் உண்கின்றது. இரண்டாண்டு்களில் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியைப் பெறுகின்றது.


ஐந்து இனங்களும் எட்டு உள்ளினங்களும் உள்ளன.


 • பேரினம் கொலோபசு (Colobus)
  கறுப்புக் கொலோபசு, (கொலோபசு இசட்டானசு, Colobus satanas), வாழிடம்: தெற்கு காமரூன், ஈக்குட்டோரியல் கினீ, காபோன், பையோக்கோ தீவு
  காபான் கறுப்புக் கொலோபசு(Gabon Black Colobus), Colobus satanas anthracinus
  பையோக்கோ கறுப்பு கொலோபசு (Bioko Black Colobus), Colobus satanas satanas
  கங்கோலாக் கொலோபசு, (கொல்ல்லொபசு அங்கோலென்சிசு, Colobus angolensis), வாழிடம்: வடக்கு அங்கோலா, உகாண்டா, காங்கோ, உருவாண்டா, புருண்டி, தென் கென்யா, தான்சானியா, வடக்கு சிம்பாபுவே
  Colobus angolensis angolensis
  Colobus angolensis cottoni
  அடோல்ப் பிரீடரிச் அங்கோலாக் கொலோபசு(Adolf Friedrich’s Angola Colobus) அல்லது ருவென்சோரி கறுப்பு-வெள்ளை கொலோபசு (Ruwenzori Black-and-white Colobus), Colobus angolensis ruwenzorii
  Colobus angolensis cordieri
  பிரியோகைனின் அங்கோலாக் கொலோபசு(Prigogine’s Angola Colobus), Colobus angolensis prigoginei
  பீட்டரின் அங்கோலாக் கொலோபசு (Peter’s Angolan Colobus) அல்லது தான்சானியா கறுப்பு-வெள்ளைக் கொலோபசு, Colobus angolensis palliatus
  அரசுக் கொலோபசு (King Colobus), (கொலோபசு பாலிகோமோசு, Colobus polykomos), வாழிடம்: காம்பியா முதல் ஐவரி கோசிட்டு வரை.
  கரடியனைக் கொலோபசு (Ursine Colobus), (கொலோபசு வெல்லரோசசு, Colobus vellerosus), வாழிடம்:ஐவரி கோசிட்டு முதல் தென்மேற்கு நைஞ்சீரியா வரை.
  போர்வை குவேரேசா (Mantled Guereza), (கொலோபசு குவேரேசா, Colobus guereza), வாழிடம்: கிழக்கு நைஞ்சீரியா முதல் எத்தியோப்பியா வரை, தான்சானியா

 • கறுப்புக் கொலோபசு, (கொலோபசு இசட்டானசு, Colobus satanas), வாழிடம்: தெற்கு காமரூன், ஈக்குட்டோரியல் கினீ, காபோன், பையோக்கோ தீவு
  காபான் கறுப்புக் கொலோபசு(Gabon Black Colobus), Colobus satanas anthracinus
  பையோக்கோ கறுப்பு கொலோபசு (Bioko Black Colobus), Colobus satanas satanas

 • காபான் கறுப்புக் கொலோபசு(Gabon Black Colobus), Colobus satanas anthracinus

 • பையோக்கோ கறுப்பு கொலோபசு (Bioko Black Colobus), Colobus satanas satanas

 • கங்கோலாக் கொலோபசு, (கொல்ல்லொபசு அங்கோலென்சிசு, Colobus angolensis), வாழிடம்: வடக்கு அங்கோலா, உகாண்டா, காங்கோ, உருவாண்டா, புருண்டி, தென் கென்யா, தான்சானியா, வடக்கு சிம்பாபுவே
  Colobus angolensis angolensis
  Colobus angolensis cottoni
  அடோல்ப் பிரீடரிச் அங்கோலாக் கொலோபசு(Adolf Friedrich’s Angola Colobus) அல்லது ருவென்சோரி கறுப்பு-வெள்ளை கொலோபசு (Ruwenzori Black-and-white Colobus), Colobus angolensis ruwenzorii
  Colobus angolensis cordieri
  பிரியோகைனின் அங்கோலாக் கொலோபசு(Prigogine’s Angola Colobus), Colobus angolensis prigoginei
  பீட்டரின் அங்கோலாக் கொலோபசு (Peter’s Angolan Colobus) அல்லது தான்சானியா கறுப்பு-வெள்ளைக் கொலோபசு, Colobus angolensis palliatus

 • Colobus angolensis angolensis

 • Colobus angolensis cottoni

 • அடோல்ப் பிரீடரிச் அங்கோலாக் கொலோபசு(Adolf Friedrich’s Angola Colobus) அல்லது ருவென்சோரி கறுப்பு-வெள்ளை கொலோபசு (Ruwenzori Black-and-white Colobus), Colobus angolensis ruwenzorii

 • Colobus angolensis cordieri

 • பிரியோகைனின் அங்கோலாக் கொலோபசு(Prigogine’s Angola Colobus), Colobus angolensis prigoginei

 • பீட்டரின் அங்கோலாக் கொலோபசு (Peter’s Angolan Colobus) அல்லது தான்சானியா கறுப்பு-வெள்ளைக் கொலோபசு, Colobus angolensis palliatus

 • அரசுக் கொலோபசு (King Colobus), (கொலோபசு பாலிகோமோசு, Colobus polykomos), வாழிடம்: காம்பியா முதல் ஐவரி கோசிட்டு வரை.

 • கரடியனைக் கொலோபசு (Ursine Colobus), (கொலோபசு வெல்லரோசசு, Colobus vellerosus), வாழிடம்:ஐவரி கோசிட்டு முதல் தென்மேற்கு நைஞ்சீரியா வரை.

 • போர்வை குவேரேசா (Mantled Guereza), (கொலோபசு குவேரேசா, Colobus guereza), வாழிடம்: கிழக்கு நைஞ்சீரியா முதல் எத்தியோப்பியா வரை, தான்சானியா

 • வெளி இணைப்புகள்

  கொலோபசுக் குரங்கு – விக்கிப்பீடியா

  Black-and-white colobus – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.