பிரான்டு முள்ளெலி

பிரான்டு முள்ளெலி (Brandt’s Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர், Paraechinus hypomelas) என்றழைக்கப்படும் இந்த முள்ளெலி இனத்திற்கு, இரசிய நாட்டிலிருக்கும் இரசிய அறிவியல் கழக விலங்கியல் துறையின் மேலாளராக இருந்த, பிரான்டு [note 2] என்பவரைப் போற்றும் வகையில் பெயரிடப்பட்டது.


வாழிடம்


இந்த இனத்தின் தாயகம் மத்திய கிழக்கு நாடுகளும், நடு ஆசியாவும் ஆகும். அங்கு பாலைவனத்தில், இவை வாழ்கின்றன. வறண்ட சூழ்நிலையில் வாழ்கிறது. குறிப்பாக மலையிலும், பாலைவனத்திலும் வாழ்கிறது. குழிப்பறித்து வங்கு அமைக்கும் திறமையிருப்பினும், இயற்கையிலேயே இருக்கும் புதைவிடங்களைத் தேர்ந்தெடுத்து, தன் வாழ்விடத்தினை அமைத்துக் கொள்கிறது.


குளிர்காலங்களில், தனது உடலின் வளர்சிதை மாற்றங்களைக் குறைத்துக் கொள்ளும் இயல்புடையதாக இருக்கிறது. அச்சமயங்களில், பெரும்பாலும் தூங்கும் பழக்கம் உடையதாக இருக்கிறது.


வளரியல்பு


இதன் உருவம் மேற்கு ஐரோப்பிய முள்ளெலி போன்றே இருக்கும். ஆனால், அந்த முள்ளெலிகளின் காதுகளை விட, இதன் காதுகள் பெரிதாக இருக்கும். இக்காதுகள் நீள்காது முள்ளெலிகளை போன்று இருக்கும். இதன் எடை ஏறத்தாழ 500-900கிராம் இருக்கிறது. இதன் நீளம் 25செ.மீ உள்ளது.


உடலின் மேற்புறம் காணப்படும் முட்கள் எடை குறைவாக இருப்பதால், வேகமாக இயங்கும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. முட்கள் எடை குறைவாக இருந்தாலும், அதன் வலுத்தன்மை சிறப்பாக இருக்கிறது. கையால் வருடுவதை ஏற்கிறது. இருப்பினும், பல நேரங்களில் துள்ளி குதித்து, அதன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. பகல் நேரங்களில், ஓய்வு எடுக்கும் இயல்புடையதாக இருக்கிறது.. இரவு நேரங்களில், நன்கு இயங்கும் குணம் உடையதாக இருக்கிறது.

வெளி இணைப்புகள்

பிரான்டு முள்ளெலி – விக்கிப்பீடியா

Brandt’s hedgehog – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.