பழுப்பு பனை புனுகுப்பூனை

ஜெர்டனின் பனை புனுகுப்பூனை என்றும் அழைக்கப்படும் பழுப்பு பனை புனுகுப்பூனை (Brown palm civet)(பாராடாக்சுரசு ஜெர்டோனி) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரியாகும்.


பண்புகள்


பழுப்பு பனை புனுகுப்பூனையில் ஒரே மாதிரியான பழுப்பு நிற முடியினைக் கொண்டது. தலை, கழுத்து, தோள்பட்டை, கால்கள் மற்றும் வால் பகுதியில் இருண்ட நிறத்தில் காணப்படும். சில நேரங்களில் முடிச் சற்று நரைத்துக் காணப்படலாம். வெளிர் வெளிர் பழுப்பு முதல் அடர் பழுப்பு வரை மிகவும் மாறுபடும் வண்ண அடிப்படையில் இரண்டு துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அடர் வண்ண வாலின் முனையில் வெள்ளை அல்லது வெளிர்-மஞ்சள் முனை கொண்டிருக்கும், ஆசிய மரநாயின் உடலிலோ அல்லது முகத்திலோ தனித்துவமான அடையாளங்கள் இல்லை. இலங்கையின் பொன்னிற மரநாயில் (பா. ஜெய்லோனென்சிசு ) உள்ளதைப் போலவே, பிடரி முடி பின்னோக்கிய வளர்ச்சி இதன் தனித்துவமான அம்சமாகும். இது பொதுவான பனை மரநாய் போலவே பெரியது. ஆனால் நீண்ட மற்றும் நேர்த்தியான வாலினைக் கொண்டது. ஆண் நாயின் உடல் எடை 3.6–4.3 kg (7.9–9.5 lb), தலை மற்றும் உடல் நீளம் 430–620 mm (17–24 in), மற்றும் வால் நீளம் 380–530 mm (15–21 in). 1885ஆம் ஆண்டில் கொடைக்கானலில் எப். லெவிங்கினால் சேகரிக்கப்பட்டு அருட்தந்தை எஸ். பி. பேர்பாங்கினால் பிளான்ஃபோர்டுக்கு அனுப்பப்பட்ட மண்டையோட்டின் முன் அண்ணத்தில் உள்ள நீளத் துளையின் அடிப்படையில் இந்த இனம் விவரிக்கப்பட்டது. மேலும் பிரான்சிசு டேயினால் சேகரிக்கப்பட்ட மற்றொரு மாதிரியுடன் தோல் பொருந்துவதையும் பிளான்போர்டு கண்டறிந்தார். எனவே தாமஸ் சி. ஜெர்டன் இந்த இனத்திற்கு ஜெர்டன் எனப் பெயரிடப்பட்டது. தெற்கு குடகில் விராஜ்பேட்டையில் சேகரிக்கப்பட்ட மாதிரி ஒன்றின் அடிப்படையில் ரெஜினோல்ட் இன்னெசு போக்கோக்கால் கிளையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.


இரண்டு கிளையினங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை பா. ஜே. ஜெர்டோனி மற்றும் பா. ஜே. கேனிசுகசு. சுலவேசி பனை மரநாய் சில நேரங்களில் பழுப்பு நிறத்தின் காரணமாக அதே ஆங்கில பெயரால் குறிப்பிடப்படுகிறது.


பரவலும் வாழ்விடமும்


பழுப்பு பனை புனுகுப்பூனை மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்திலிருந்து வடக்கே கோவாவில் உள்ள கோட்டை பாறை வரை பரவியுள்ளது. இவை இரவாடுதல் வகையின. மேலும் முன்னர் கொடைக்கானல் மற்றும் உதகமண்டலத்தில் காணப்படாததால் உள்நாட்டில் அழிந்துபோனதாகக் கருதப்பட்டன.


தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் போன்ற வணிக ரீதியான நிலப்பரப்புகளுக்கு இடையே வெப்பமண்டல மழைக்காடுகளின் எச்சங்கள் அடங்கிய துண்டு துண்டான நிலப்பரப்புகளில் பழுப்பு பனை புனுகுப்பூனை காணப்படுகிறது. இத்தகைய நிலப்பரப்புகளில் தொடர்ந்து நிலைத்திருக்கும் இவற்றின் திறன், காபி தோட்டங்களில் நிழல் மரங்கள் போன்ற பழ மர வகைகளின் பன்முகத்தன்மையினைப் பொறுத்தது.


சூழலியல் மற்றும் நடத்தை


பழுப்பு பனை புனுகுப்பூனை தனித்து வாழும், இரவாடுதல் வகை விலங்குகளாகும். பகல் பொழுதில் இவை மரத்தின் பொந்து, கிளை இடைவெளி, இந்திய மலை அணில் கூடுகளில் ஓய்வெடுக்கின்றன. பகல் படுக்கை மரங்கள் பெரியவையாகவும் பொதுவாக அடர்த்தியானதாகவும் உள்ளன. இவை சில நேரங்களில் திறந்த கிளைகளில் இரவில் ஓய்வெடுக்கும்.


உணவு


பழுப்பு பனை புனுகுப்பூனை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளில் பழங்களை உண்ணும் முக்கிய பாலூட்டி ஆகும். இதனால் இவை விதை பரவலுக்கு உதவுகின்றது . பழங்கள் இதன் உணவில் மிகப் பெரிய விகிதத்தை (97 சதவீதம்) கொண்டுள்ளன. இதனுடைய உணவில் 53க்கும் மேற்பட்ட பூர்வீக மற்றும் 4 அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உணவு முறைகள் ஆண்டுகளுக்கிடையேயும் ஒரே வருடத்திற்குள்ளும் கூட மாறுபடும். உணவு கிடைப்பதன் அடிப்படையிலும், காலநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப இவை ஒத்துப் போகின்றன. இவை லியானாக்களின் பழங்கள், அரிதாக மூலிகைகள் அல்லது புதர்களில் உள்ள பழங்களை உணவாகக் கொள்கிறது. உணவு பெரும்பாலும் சிறியதாக உள்ளது (<1 செ.மீ விட்டம்). சதைப்பாங்கான பெரி, மற்றும் மிதமான முதல் உயர் நீர் உள்ளடக்கம் கொண்ட ட்ரூப்ஸ், பல பெரிய (> 2 போன்ற செ.மீ) பழங்கள் பலாகுயுயம் எல்லிப்டிகம், ருத்திராட்சம், ஹோலிகர்னா நிக்ரா மற்றும் நீமா அட்டெனுடா. கல்லேனியா எக்ஸாரிலாட்டா மற்றும் சிசைஜியம் இனங்களின் பூக்களையும் இவை உண்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பாதுகாப்பு


இதன் பரந்த பரவல் பரப்பும் மற்றும் இதன் வாழிடம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் இருப்பதால் குறைந்த பாதுகாப்பு அக்கறை கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பகுதிகளில் பெரும்பாலும் பெரிய பாலூட்டி சிதறல்கள் மற்றும் இருவாட்சி மற்றும் பெரிய புறாக்கள் போன்ற பறவைகள் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டை காரணமாக இல்லை. மனிதனால் பாதிக்கப்பட்டுச் சிதறிய நிலப்பரப்புகளில் பல்லுயிரிய பராமரித்தலில் இந்தப் புனுகுப்பூனை முக்கியத்துவம் பெறுகிறது.


வெளி இணைப்புகள்

பழுப்பு பனை புனுகுப்பூனை – விக்கிப்பீடியா

Brown palm civet – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *