வட இந்திய மைம்முகன் ((Semnopithecus entellus, செமுனோபித்தேகசு எண்டெல்லசு) என்பது பாலூட்டிகளில் முதனி வரிசையில் செர்க்கோபித்தேசிடீ (Cercopithecidae) குடும்பத்தைச் சேர்ந்த இனமான குரங்கு. தென் சமவெளி மைம்முகன் என்னும் குரங்கு இந்த வட இந்திய மைம்முகன் (S. entellus’) என்பதன் சிற்றினமாக S. entellus dussumieri’ முன்பு குறிக்கப்பெற்றது. இதன் வாழிடம் இந்தியாவில் இமயமலைக்குத் தெற்கே தபதி ஆற்றுக்கும் கிருட்டிணா ஆற்றுக்கும் தெற்கே பெரிய நிலப்பரப்பு ஆகும் இந்து சமயப் பயணிகள் சலங்கி ஆற்றங்கரையில் வங்காள தேசத்தின் மேற்குப்பகுதியில் அறிமுகப்படுத்தியதாகக் கருதப்படுகின்றது இதன் இயல் வாழ்விடம் வெப்பமண்டல அல்லது இளவெப்பமண்டலக் காடுகளிலும் புதர் வெளிகளும் ஆகும். இயல் வாழிட இழப்பால் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன.
About the author
Related Posts
October 4, 2021
இலங்கை தொங்கும் கிளி
September 21, 2021
புருக்கேசியா நானா
September 30, 2021