எல்விரா எலி

எல்விரா எலி (Elvira Rat)(கிரிம்னோயுசு எல்விரா) என்பது அருகிவரும் எலியினமாகும். இது கொறிணியில் முரிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இந்த இனத்தை முதன்முதலில் சர் ஜான் எல்லர்மேன் 1946இல் விவரித்தார். இது இந்தியாவின் தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.


விளக்கம்


எல்விரா எலியின் நீளம் தலை மற்றும் உடல் சுமார் 149 மிமீ வரை இருக்கும். இதன் வாலின் நீளம் மட்டும் சுமார்196 மிமீ வரை கூடுதலாக அமைகிறது. இந்த எலியின் மேற்புறம் பழுப்பு சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி சாம்பல் கலந்த வெண்மையாகவும், வாலானது இரு வண்ணத்தில் காணப்படும்.


பரவலும் வாழ்விடமும்


இந்த இனம் தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேலம் மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது பாறைகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீ உயரத்தில் உள்ள உலர்ந்த இலையுதிர் புதர் காடுகளில் காணப்படுகிறது.


பாதுகாப்பு


இந்த எலியின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், மனித குடியிருப்புகளின் விரிவாக்கம், மேய்ச்சல் மற்றும் சுரங்க குப்பைகளைக் கொட்டுதல் ஆகியவற்றின் மூலம் வாழ்விட இழப்பு காரணமாக அழிவினை நோக்கி அதிக அழுத்தத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் அழிவாய்ப்பு இனமாகக் கருதப்பட்டது; ஆனால் தற்பொழுது மிக அருகிய இனமாகப் பாதுகாப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

எல்விரா எலி – விக்கிப்பீடியா

Elvira rat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.