கயால் மாடு

மிதுன் என்றழைக்கப்படும் கயால் என்பது மாட்டு இனத்தை சேர்ந்த பழக்கப்படுத்தப்பட்ட பெரிய விலங்கு ஆகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வடக்கு மியன்மரிலும் பங்களாதேஷிலும் சீனாவின் யுனான் மாகாணத்திலும் பரவியுள்ளது.


இதன் தோற்றம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன


 • இது கடமா என்னும் காட்டு மாட்டினை பழக்கப்படுத்தி வந்திருக்கலாம்.

 • கடமா, நாட்டு மாடு இவற்றின் கலப்பினமாக இருக்கலாம். ஆனால் இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை. கடமாவிலிருந்து காயல் பல குறிப்பிடத்தக்க அம்சங்களில் வேறுபடுகிறது.

 • கயால்கள் மலைக்காடுகளில் பெரும்பாலும் வாழ்கின்றன. மலைப்பகுதிகளில் வாழும் தெற்காசிய இனக்குழுக்களில் திரிபுரா, மிசோரம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து பல குழுக்கள் இவற்றை வீட்டுவிலங்காக வளர்த்துவருகின்றனர். மேலும் சிட்டகாங்க் மலைப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. வடக்கு மியன்மரில் கச்சின் மாநிலத்திலும் யுனான் மாநிலத்தில் துரங் மற்றும் சல்வீன் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மாநில விலங்கு இதுவே ஆகும். மேலும் அருணாச்சல பிரதேச மக்களின் வாழ்க்கையில் இந்த கயால் இரு முக்கிய பங்கு வகிக்கிறது.


  வெளி இணைப்புகள்

  கயால் – விக்கிப்பீடியா

  Gayal – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.